
இந்த ஆண்டு இறுதியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இந்த ஆஸ்திரேலியா தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரான ஆண்ட்ரூ மெக்டொனால்டு சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்த டேவிட் வார்னர் அண்மையில் ஓய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.
ஆனால் ஸ்மித மிடில் ஆர்டரில் விளையாடுவது போல் துவக்க வீரராக சிறப்பாக செயல்பட முடியவில்லை. இதன் காரணமாக அவர் மீண்டும் தனது பழைய மூன்றாவது இடத்திற்கு மாற்றப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து பேசிய பயிற்சியாளர் கூறுகையில் :
ஸ்மித் தொடக்க வீரராக தொடர்வாரா என்று யோசித்து கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவையும் இதுவரை நாங்கள் உறுதி செய்யவில்லை. ஆனாலும் ஸ்மித்தை பின்வரிசைக்கு மாற்றினால் மற்ற வீரர்கள் யாராவது மேல் வரிசையில் விளையாட வைக்க வேண்டும் அது தற்போது முடியாது. எனவே ஸ்மித் தொடர்ந்து துவக்க வீரராகவே விளையாடுவார்.
இதையும் படிங்க : இது பாகிஸ்தான் கிடையாது.. இந்தியாவில் உங்களால் இதை செய்ய முடியாது.. வங்கதேச கேப்டன் கருத்து பற்றி டிகே
மற்றபடி எங்கள் அணியின் டாப் ஆறு வீரர்களில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. ஸ்மித், கவஜா, ட்ராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், மிட்சல் மார்ஷ், லாபுஷேன் ஆகியோர் தொடர்ந்து விளையாடுவார்கள். அவர்கள் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் என ஆண்ட்ரூ மெக்டொனால்டு கூறியது குறிப்பிடத்தக்கது.