நான் ஓய்வுபெறும் வரை கொல்கத்தா அணிக்காக மட்டுமே விளையாடுவேன் – நட்சத்திர வீரர் அதிரடி

Kkr
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இது டி20 லீக் கிரிக்கெட் தொடர் என்பதால் பல்வேறு நாட்டின் வீரர்களும் இந்தியாவிற்கு வந்து வருடாவருடம் விளையாடி வருகின்றனர். குறிப்பாக இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அதிரடி மூலம் ஐபிஎல் தொடர் களைகட்டும். தொடர்ந்து ஐ.பி.எல் தொடருக்கு உலகளவில் கிடைத்த வரவேற்பு காரணமாக இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன.

kkr

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து பல்வேறு அதிரடி வீரர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது அதிரடியை ஐ.பி.எல் தொடரில் காண்பித்து வருகின்றனர். கெரோன் பொல்லார்ட், டிவைன் பிராவோ, ஆன்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் பல செயல்களை தங்களது அதிரடியில் மூலம் செய்வார்கள்.

இதில் ஆன்ட்ரே ரசல் கொல்கத்தா அணிக்காக கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். அதிலும் கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக ருத்ர தாண்டவம் ஆடி அந்த அணிக்கு பல வெற்றிகளை தனி ஒரு ஆளாக பெற்று கொடுத்துள்ளார். இந்நிலையில் கொல்கத்தா அணியுடன் ஆடிய அனுபவம் குறித்து அவர் பேசியதாவது..

Russell

நான் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறேன். ஆனால் ஐபிஎல் தொடரில் ஆடும் போது எனக்கு சிறிது சிலிர்ப்பு அதிகம் ஏற்படும். குறிப்பாக ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடும் போது ரசிகர்கள் கொடுக்கும் உற்சாகம் என்னை வித்தியாசமாக உணரவைக்கும். அதற்கு ஈடாக வேறு எதுவும் கிடையாது.

- Advertisement -

ரசிகர்கள் என்னை வரவேற்கும் ஆழகிற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. இதுதான் ரசிகர்களின் உண்மையான அன்பு. நான் கடைசி 5 ஓவர்களில் வந்து பேட்டிங் பிடிக்க வருவேன், அல்லது ஒரு ஓவரில் 11 ரன்கள் தேவைப்படும்போது வருவேன். இந்த நிலைமைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதனை அடித்து கொடுத்துவிட்டால், ரசிகர்கள் நம்மை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

Russell

கொல்கத்தா ரசிகர்கள் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் மூன்றாவது போட்டியிலும் அதே உற்சாகத்தோடு நம்மை வரவேற்பார்கள் அதுமட்டுமின்றி நான் கிரிக்கெட் விளையாடும் வரை கொல்கத்தா அணிக்காக மட்டுமே ஐ.பி.எல் போட்டிகளால் விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார் என்று ஆன்ட்ரே ரஸல். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் பலமான அணியாக திகழும் கொல்கத்தா இந்த வருடமும் தினேஷ் கார்த்திக் தலைமையில் மிக பலம் வாய்ந்த அணியாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement