- Advertisement -
உலக கிரிக்கெட்

Andre Russell : உலககோப்பை வேண்டாம். தொடரில் இருந்து வெளியேறிய – ரசல்

உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன. நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரசல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.

உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆல்ரவுண்டர் ரசல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு போட்டிக்கு முன் மூட்டுப்பகுதியில் காயமடைந்திருந்தார். அந்த காயம் பெரிதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை.

- Advertisement -

மேலும் இந்த காயம் குணமடையும் என்று எதிர்பார்த்த அணி நிர்வாகம் ஏமாற்றம் அடைந்தது. ரசலின் காயம் குணமடைய நாட்கள் அதிகமாக தேவைப்படுவதால் இந்த உலக கோப்பை தொடரில் இருந்து ரசல் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுனில் அம்பரீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெறும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள அம்பரீஸ் அணியில் சேர்க்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த உலக கோப்பை தொடரில் தனது அதிரடி வெளிப்படுத்துவேன் என்று அணியின் வாய்ப்பு கேட்டு இடம் பிடித்து விளையாடி வந்த ரசல் தற்போது எதிர்பாராதவிதமாக காயமடைந்து பாதி உலக கோப்பை தொடரில் வெளியேறுவது அந்நாட்டு ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதிரடி ஆட்டம் ஆடுவார் என்று எதிர்பார்த்த ரசலிடம் இந்த தொடரில் அவரின் அதிரடி அவ்வளவாக எடுபடவில்லை என்றே கூறவேண்டும்.

- Advertisement -
Published by