ஹேட்டர்ஸ் ஓரம் போங்க.. 125 டெசிபல் சத்தம்.. தல தோனிக்கு வியப்புடன் ஆண்ட்ரே ரசல் கொடுத்த பாராட்டு

Rusell Dhoni
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வீழ்த்தியது. அதனால் 2 தொடர் தோல்விகளை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் நிறுத்திய சென்னை 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27 ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3, தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் சேசிங் செய்த சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 67*, சிவம் துபே 28, டேரில் மிட்சேல் 25 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் கொல்கத்தா முதல் தோல்வியை பதிவு செய்தது.

- Advertisement -

ரசல் வியப்பு:
முன்னதாக 5 கோப்பைகளை வென்று சென்னை வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக கருதப்படும் எம்.எஸ். தோனி இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார். அதனால் விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் அவர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்ய வரவில்லை.

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கிய அவருக்கு 125 டெசிபல் சத்தத்தில் மெரினாவுக்கு கேட்கும் அளவுக்கு சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வெறித்தனமாக ஆரவாரம் செய்து விசிலடித்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது பவுண்டரி எல்லை அருகே நின்று கொண்டிருந்த நட்சத்திர வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல் ரசிகர்களின் சத்தத்தை தாங்க முடியாமல் தம்முடைய காதுகளை கைகளால் பொத்திக் கொண்டார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து போட்டி முடிந்ததும் தோனியிடம் சென்று ரசல் பேசி மகிழ்ந்தார். இந்நிலையில் சேப்பாக்கத்தில் கொடுக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பை பார்த்து வியந்து போன ரசல் இந்த உலகிலேயே அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட்டர் என்றால் அது தோனி தான் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த உலகிலேயே இவர் தான் அதிகம் விரும்பப்படும் கிரிக்கெட்டர் என்று நான் எளிதாக நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சேப்பாக்கம் எப்படின்னு நல்லா தெரிஞ்சி வச்சிருக்காங்க.. தோல்விக்கு பின் சி.எஸ்.கே வீரர்களை பாராட்டிய – ஷ்ரேயாஸ் ஐயர்

பொதுவாக மற்ற வீரர்களின் உழைப்பையும் பாராட்டுகளையும் திருடுபவர் என்று தோனியை ஒருதரப்பு ரசிகர்கள் வெறுப்புடன் இகழ்வது வழக்கமாகும். ஆனால் தற்போது தம்மைப் பொறுத்த வரை ஹேட்டர்ஸ் இல்லாத அளவுக்கு தோனி தான் உலகிலேயே அதிக ரசிகர்களால் விரும்பப்படும் வீரர் என்று ரசல் பாராட்டியுள்ளார். அவர் கூறுவது போல சென்னை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement