
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரே ரசல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்திருந்த வேளையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதால் இந்த ஓய்வு முடிவினை அவர் எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால் உலகெங்கிலும் நடைபெறும் பெற்று வரும் மற்ற டி20 லீக் தொடர்களில் அவர் தற்போது தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.எல்.டி டி20 லீக் தொடரில் விளையாடி வருகிறார்.
அப்படி நடைபெற்று வரும் ஐ.எல்.டி டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் விளையாடிய ஆண்ட்ரே ரசல் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் ஒரு மாபெரும் வரலாற்று சாதனையை முதல் வீரராக நிகழ்த்தியுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக ஐ.எல்.டி டி20 போட்டியில் டெசர்ட் வைப்பர் சார்ஜா அணிக்கு எதிராக விளையாடிய அவர் பேட்டிங்கில் அதிரடியாக 30 ரன்களுக்கு மேல் அடித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அவர் எடுத்த அந்த ஒரு விக்கெட் மூலம் தான் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது ஏற்கனவே ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள அவர் 500 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளார். அதேவேளையில் நேற்று அவர் எடுத்த ஒரு விக்கெட் மூலம் ஒட்டு மொத்தமாக டி20 போட்டிகளில் அவரது 500 விக்கெட்டாக அது அமைந்தது.
இதையும் படிங்க : இந்தியாவின் தோல்விக்கு காரணமாகும் பனியை.. தவிர்க்க அதை மாத்தனும்.. கோச் ரியன் பேட்டி
இதன் மூலம் டி20 போட்டிகளில் 5000 ரன்கள், 500 விக்கெட்டுகள் மற்றும் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரசல் படைத்துள்ளார். இவருக்கு அடுத்து ஷாகிப் அல் ஹாசன் டுவைன் பிராவோ ஆகியோர் 5000 ரன்களையும், 500 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தாலும் 500 சிக்ஸர்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.