இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஆனால் 2வது போட்டியில் 359 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா தோற்றது. அதனால் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் கடைசிப் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஒருநாள் போட்டிகள் பெரும்பாலும் மதியம் துவங்கி இரவு 10 – 11 மணிக்குள் முடிவடையும். அப்படி விளையாடும் போது இரவு நேரத்தில் வரும் பனிப்பொழிவு இரண்டாவதாக பந்து வீசும் அணிக்கு பாதிப்பை உண்டாக்கி வருகிறது. குறிப்பாக பனிப்பொழிவின் காரணமாக ஈரமாகும் பந்தை பவுலர்கள் நன்றாக பிடித்து நாங்கள் விரும்பும் இடத்தில் வீசுவது மிகவும் கடினமாகும்.
பனியின் தாக்கம்:
அதுவே 2வது போட்டியில் 359 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா தோற்க காரணமானதாக கேப்டன் கே.எல். ராகுல் தெரிவித்தார். இந்நிலையில் பனியின் தாக்கத்தைக் குறைப்பதற்கு போட்டி துவங்கும் நேரத்தை மாற்ற வேண்டுமென்று இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியன் டஸ்சேட் ஆலோசனை தெரிவித்துள்ளார். குறிப்பாக 1.30 மணிக்கு துவங்கும் போட்டியை 11.30 மணிக்கே துவங்குவது பனியின் தாக்கத்தை குறைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பனியின் தாக்கம் இங்கே மிகவும் பெரிதாக இருக்கிறது. அது எங்களுடைய தவறல்ல. ஆனால் அதையும் தாண்டி வெற்றி பெறுவதற்கான வழியைக் கண்டறிவது உங்களுடையப் பொறுப்பாகும். முதலில் பேட்டிங் செய்வதற்கும் இரண்டாவதாக பேட்டிங் செய்வதற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வை குறைப்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது”
குறைக்க ஆலோசனை:
“2வது இன்னிங்ஸ் துவங்கும் போது பனி வந்து விடுகிறது. எனவே போட்டியை வித்தியாசமான நேரத்தில் துவங்குவது அதன் தாக்கத்தைக் குறைக்கும். அதற்காக ஆட்டத்தை நீங்கள் 2 மணி நேரங்கள் முன்னதாக துவக்குவது நல்லத் தீர்வாக இருக்கும். ஆனால் அப்படி நேரத்தைக் குறைப்பது ஒளிபரப்பு சம்பந்தமான விஷயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இப்படி பேசுவதே வீணான பேச்சாகும்”
இதையும் படிங்க: அஸ்வின் திறமையில் பாதி கூட இல்லாத சுந்தர்.. முதலில் கேப்டன் நம்புற அளவுக்கு அதுல முன்னேறனும்.. கைஃப் பேட்டி
“34 ஓவர்களுக்குப் பின் ஒரே ஒரு பந்தில் விளையாடுவது முக்கிய புள்ளியாகும். அப்போது நாங்கள் கடினமான பந்தை வைத்து விளையாட விரும்புகிறோம். அந்த சமயங்களில் நடுவர்கள் பந்தை மாற்றுவதில் நன்றாக ஒத்துழைக்கின்றனர். பொதுவாக நாங்கள் 320 ரன்கள் போதுமானது என்று நினைப்போம். சூழ்நிலையை பார்த்துவிட்டு அதை 350 ஆக மாற்றுவோம். ஆனால் சில நேரங்களில் அதைக் கட்டுப்படுத்த சூழ்நிலைகள் கடினமாகிறது” என்று கூறினார்.



