- Advertisement -
உலக கிரிக்கெட்

முதன்முறையாக தந்தை ஆகப்போகும் அறிவிப்பை வெளியிட்ட – வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான 31 வயதாகும் ஆன்ட்ரே ரசல் ஜமைக்காவில் பிறந்து தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தனது அதிரடி ஆட்டம் காரணமாக உலகம் முழுவதும் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை ரசல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் முதன் முறையாக தந்தையாகும் விடயத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவரது மனைவி மற்றும் நண்பர்கள், உறவினர்கள் என சிலருடன் தனிமையாக வித்தியாசமான முறையில் அவர்கள் தங்களது முதல் குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

மேலும் எனக்கு ஆண், பெண் என்று எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை. குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அதுவே எனக்கு போதும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by