டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது 589 விக்கெட்டுகள் சாதனையை முறியடிக்க இவருக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது – ஆண்டர்சன் கணிப்பு

Anderson-3
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் போட்டியில் சேர்க்கப்படாத ஸ்டூவர்ட் பிராட் குறித்து கடும் விமர்சனங்கள் எழ கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் சேர்க்கப்பட்டார்.

Broad

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஸ்டூவர்ட் பிராட் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வொயிட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

மேலும் இங்கிலாந்து அணி சார்பாக 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமில்லாது உலகளவில் இந்த சாதனையை செய்த நான்காவது வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 589 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையில் முதலிடத்தில் உள்ளார்.

broad

இந்நிலையில் தற்போது பிராடின் இந்த சாதனையை பாராட்டி பேசிய ஆண்டர்சன் கூறுகையில் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் பிராட் பந்து வீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் மிக நேர்த்தியாக பந்துவீசி அனைவரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். மேலும் அவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்பது பாராட்டத்தக்கதாகும்.

broad

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இங்கிலாந்து வீரராக நான் இருப்பினும் எனது சாதனையை அவர் நிச்சயம் கடந்து சென்று புதிய சாதனை படைப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு இந்த சாதனை புரிய நல்ல வாய்ப்பு உள்ளது என்று ஆண்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement