- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் சொல்லியே ஆகனும் இந்திய அணியின் வீரரான இவர் சூப்பர் பிளேயர் – ஆண்டர்சன் புகழாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களை மட்டுமே குவிக்க இந்திய அணி ஆனது தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்துள்ளது. ராகுல் 57 ரன்களுடனும், பண்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது பந்து வீச்சில் புஜாரா 4 ரன்களிலும், கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்கள். துவக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணியை ஆண்டர்சன் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் தற்போது முடக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த போட்டிக்கு முன்பாக அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி இந்திய அணியில் ஒரு சிறப்பான பேட்ஸ்மேன் உள்ளதாகவும் அவர் தனது பந்துவீச்சை எளிதாக விளாசுகிறார் என்றும் தெரிவித்துள்ளார். அந்த பேட்ஸ்மேன் வேறுயாருமில்லை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். ஆனால் ரிஷப் பண்ட் ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிகவும் ஆக்ரோஷமான விளையாடக்கூடிய அவர் பவுலர்கள் யோசிக்காத விதத்தில் யோசித்து தனது ஷாட்களை விளையாடி வருகிறார்.

குறிப்பாக என்னை போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை முயற்சி செய்கிறார். நிச்சயம் அவர் ஒரு திறமையான வீரர் தான் அது மட்டுமின்றி நல்ல டேலண்ட் உடைய பிளேயராகவும் அவர் திகழ்கிறார் என ஆண்டர்சன் பாராட்டியுள்ளார். 39 வயதான ஆண்டர்சன் தனது கிரிக்கெட் கேரியரில் பல்வேறு பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசி அச்சுறுத்தலாக இருந்துள்ளார். இப்படி ஒரு பவுலர் இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித், கோலி ஆகியோரை பாராட்டாமல் பண்டை பாராட்டியுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் அறிமுகமாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இடையில் தனது பார்ம் அவுட் காரணமாக அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரின் போது இடம்பெற்ற அவர் அதிலிருந்து தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by