முகமது சிராஜை சீண்டிய ஆண்டர்சன். அப்படி என்ன கோவம் ? – களத்தில் நடந்தது என்ன ?

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் சார்பாக கேப்டன் ஜோ ரூட் 64 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நேற்று மூன்றாவது நாளில் தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 278 ரன்களை குவித்தது.

indvseng

- Advertisement -

அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல் 84 ரன்களும், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் குவித்தனர். இந்தப் போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 232 ரன்களில் இருந்தபோது 8 விக்கெட் விழுந்திருந்தால் இந்திய அணி 250 ரன்களைக் கூட கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிநேரத்தில் ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ஷமி 20 பந்துகளில் 13 ரன்கள் குவித்தார். அதேபோன்று பும்ராவும் 34 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 28 ரன்களை அதிரடியாக குவித்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் பும்ராவும், சிராஜும் விளையாடிக் கொண்டிருக்கையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 86 ஆவது ஓவரில் சிராஜுக்கு எதிராக ஆவேசமாக சில வார்த்தைகளை உதிர்த்தார்.

bumrah

இந்திய அணி 90 ரன்கள் முன்னிலை பெற்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது. சிராஜிக்கு எதிராக பந்து வீசிய ஆண்டர்சன் அவரிடம் சென்று வார்த்தைகளை உதிர்த்தது மட்டுமின்றி அவரது நெஞ்சிலும் உரசிவிட்டு சென்றார். இந்த சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Anderson

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த ஏகப்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இந்தியாவின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனை வீழ்த்த முடியாமல் இப்படி சீண்டலில் ஈடுபடுவது தவறு என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Advertisement