டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆண்டர்சன் – விவரம் இதோ

anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆகஸ்ட் 4ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்கள் குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 278 ரன்கள் குவித்தது.

anderson 1

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ராகுலை ஆட்டமிழக்க வைத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து ஆண்டர்சன் புதிய சாதனையை படைத்தார்.

அந்த சாதனையை இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

anderson 1

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ராகுலை வீழ்த்தியதன் மூலம் அணில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இன்னிங்சின் முடிவில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 621 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

anderson 2

மேலும் வேகப்பந்து வீச்சாளராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 முறை 5 விக்கெட்டுகளையும், மூன்று முறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் இதுவரை 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 621 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement