ஆஷஸ் தோல்வி எதிரொலி : 2 ஜாம்பவான்களுக்கு டாட்டா காட்டிய இங்கிலாந்து – கதை முடிந்ததா?

England
- Advertisement -

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 8, 16, 24 ஆகிய தேதிகளில் வெஸ்ட் இண்டீசில் உள்ள முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது.

ashes

- Advertisement -

இந்த தொடருக்கு தயாராகும் வண்ணம் 4 நாட்கள் அடங்கிய பயிற்சி போட்டியில் வரும் மார்ச் 1ஆம் தேதி இங்கிலாந்து லெவன் அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

கழட்டிவிடப்பட்ட ஆண்டர்சன் – பிராட்:
ஜோ ரூட் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்படாதது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இருப்பினும் சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் 4 – 0 என்ற கணக்கில் படுமோசமான ஒயிட்வாஷ் தோல்வியை பெற்ற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து மண்ணைக் கவ்வியது.

Anderson

அதன் காரணமாக கடும் ஏமாற்றமடைந்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து டெஸ்ட் அணியை புதுப்பிக்க இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆஷஸ் தொடரில் கிடைத்த படுமோசமான தோல்வியால் ஆஷ்லே கில்ஸ், கிறிஸ் சில்வர்வுட், கிரகாம் த்ரோப் போன்ற பயிற்சியாளர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கியது.

- Advertisement -

டாட்டா காட்டிய இங்கிலாந்து:
இருப்பினும் கேப்டனாக ஜோ ரூட் தொடர்ந்து செயல்படுவார் என அறிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் ப்ராட் போன்ற மூத்த வீரர்களை விடுவித்து அவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளது.

Anderson

இதுபற்றி இங்கிலாந்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறியது பின்வருமாறு.”இது ஒரு புதிய முயற்சி என்பதால் இந்த தொடரில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க நேரம் வந்துள்ளது. சொல்லப்போனால் அணியில் உள்ள ஒரு சில வீரர்கள் தலைமைப் பொறுப்பில் செயலாற்ற கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும் ஆண்டர்சன் – பிராட் ஆகியோரை சிலநேரம் அணியில் இருந்து விடுவிக்க இதை ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். அப்போதுதான் இங்கிலாந்து இயக்குனர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நல்ல அணியை தேர்வு செய்ய வாய்ப்பு அமையும்” என கூறியுள்ளார்.

- Advertisement -

கதை முடிந்ததா:
இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களாக கருதப்படும் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் ப்ராட் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் 2 இங்கிலாந்து பந்துவீச்சாளர்களாக சாதனை படைத்துள்ளார்கள். இதில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 640 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். அதேபோல் 537 விக்கெட்களுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2வது இங்கிலாந்து பவுலராக ப்ராட் சாதனை படைத்துள்ளார்.அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பந்துவீச்சு கூட்டணி என்ற மகத்தான பெருமையை ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே (1001 விக்கெட்கள்) ஆகியோருக்கு பின் இவர்கள் பெற்றுள்ளார்கள்.

anderson

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்துக்காக ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பிராட் ஆகியோர் கூட்டாக இணைந்து இதுவரை 902 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்கள்.சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தோல்வி அடைய அதன் மோசமான பேட்டிங் தான் முக்கிய காரணமாக அமைந்தது. அந்த படுமோசமான தோல்வியிலும் கூட பந்துவீச்சு ஓரளவு சிறப்பாகவே இருந்தது. எனவே பேட்டிங் துறையை முன்னேற்ற தேவையான நடவடிக்கை எடுக்காமல் ஆண்டர்சன் – ப்ராட் ஆகியோர் மீது கை வைப்பது என்ன நியாயம் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு பற்றி இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வினவுகிறார்கள்.

இருப்பினும் தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 39 வயதையும் ஸ்டுவர்ட் ப்ராட் 35 வயதையும் கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த முடிவால் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் ஆகியோரின் எதிர் காலம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை என இங்கிலாந்து நிர்வாக இயக்குனர் ஆண்ட்ரு ஸ்டார்ஸ் தெரிவித்துள்ளார்.

anderson 2

வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி இதோ:
ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பைர்ஸ்டோ, ஜாக் க்ராவ்லி, மாத்தியூ பிஸிச்சேர், பென் போக்ஸ், டான்லாரன்ஸ், ஜாக் லீச், அலெஸ் லீஸ், சக்கிப் மஹ்மூத், கிரேக் ஓவெர்ட்டன், மாத்தியூ பார்கின்சன், ஓலி போப், ஓலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் ஒக்ஸ், மார்க் வுட்

Advertisement