எதிரணி வீரரை வாய்பிளக்க வைத்த விராட்கோலி புகழ்பாடும் இங்கிலாந்து வீரர்!

Kohli

தற்போது உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர் விராட் கோலி இவருக்கும் ஒரு சில சோதனைகள் வந்துள்ளது. 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது மிகவும் கடுமையாக சோதிக்கப்பட்டார்.

Kohli 3

விராட் கோலி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இவரால் வெறும் 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியில் இருந்த சூழல் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பலமுறை அவரது விக்கெட்டை வீழ்த்தி வழியனுப்பி வைத்தார் .

இப்படி இங்கிலாந்தில் அவர் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு இந்திய அணி மீண்டும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் தனது சுயரூபத்தைக் காட்டினார். விராட் கோலி மொத்தம் 193 ரன்கள் குவித்தார்.

Kohli-3

மூன்று சதங்கள் இரண்டு அரை சதங்கள் என ருத்ரதாண்டவம் காட்டினார் விராட் கோலி தற்போது இது குறித்து பேசியிருக்கிறார் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அவர் கூறுகையில். 2014ம் ஆண்டு விராட் கோலி பெரிதாக ஆட முடியவில்லை.

- Advertisement -

ஆக்ரோஷமாக ஆடுகிறேன் என்ற பெயரில் தேவையில்லாத பந்துகளை தொட்டு தனது விக்கெட்டை இழப்பார். நாங்கள் நல்ல பந்து வீசும் போதெல்லாம் அவர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறி இருக்கிறார்.

Kohli 4

ஆனால் 2018 ஆம் ஆண்டு அவரை பார்த்ததும் நான் ஆச்சரியப்பட்டு போனேன். நாங்கள் வீசும் நல்ல பந்துகளை எல்லாம் விட்டுவிடுவார் .சரியான பந்துகளை மட்டுமே அடித்து ரன்களை குவித்தார். இதனை பார்த்த எனக்கு மிகப்பெரும் ஆச்சரியமாக இருந்தது

kohli

திடீரென இப்படி ருத்ரதாண்டவம் காட்டுகிறாரே என்று நினைத்தேன். அதே போல் இந்திய ஆடுகளங்களில் ஆடுவது எனக்கு பிடிக்கும். இந்திய ஆடுகளங்களில் ஆடும் போதெல்லாம் பந்தை கெட்டியாக பிடித்துக் வீசுவேன் என்று தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்