அஸ்வின் புகைப்படத்தை சுக்கு நூறாக கிழித்த இங்கிலாந்து நட்சத்திர வீரர் – காரணம் இதுதானா ?

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறார். தற்போது அஸ்வின் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

Dc

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் பங்கேற்றது அந்த போட்டியில் அஸ்வின் ராஜஸ்தான் வீரரான ஜாஸ் பட்லரை மான்கட் முறையில் ரன் அவுட் செய்து வெளியேற்றினார். இந்த விக்கெட் கிரிக்கெட் விமர்சகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் அஸ்வினின் இந்த விக்கெட்டுக்கு எதிராக பலரும் பல கருத்துக்களை கூறிவந்த நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் அஸ்வினின் புகைப்படத்தை கிழித்து தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ :

ஆண்டர்சனின் இந்த செயல் பலரும் எதிர்த்து வருகின்றனர். என்னதான் அஸ்வின் அப்படி செய்திருந்தாலும் அதற்கு ஆண்டர்சன் இப்படியா செய்வார் என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்ட படி உள்ளனர்.

Advertisement