என்னுடைய 15 வருட கிரிக்கெட் வாழ்வில் நான் சந்தித்த கடினமான பவுலர் இதுதான் – ஆம்லா ஓபன் டாக்

amla-1
- Advertisement -

உலக கோப்பை தொடர் முடிந்து பல வீரர்கள் தங்களது ஓய்வு முடிவை அறிவித்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை கடந்த வியாழன் அன்று (8-8-19) அறிவித்தார்.

Amla

- Advertisement -

இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் இவர் மொத்தமாக 18672 ரன்களை அடித்துள்ளார். அத்துடன் 55 சதங்களும் 88 அரை சதங்களும் அடித்துள்ளார்.

இந்நிலையில் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஹசிம் அம்லா கூறியதாவது : என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுக்க நான் நன்றாக விளையாடி உள்ளதாக நினைக்கிறேன். மேலும் கிரிக்கெட் மூலம் பல நண்பர்களை நான் சம்பாதித்து இருக்கிறேன். என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் நான் பல முன்னணி பந்துவீச்சாளர்களைசந்தித்துவிட்டேன்.

asif

அதில் நான் சந்தித்த கடினமான பவுலர் என்றால் அது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது ஆசிப் தான். அவருடைய வேகம் 135 கிலோமீட்டர் இருந்தாலும் அவருடைய துல்லியமான ஸ்விங் பந்துவீச்சின் தன்மையை கணிக்க முடியாது. அவரது பந்துவீச்சினை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டு உள்ளேன் என்று ஆம்லா கூறினார்.

Advertisement