என்ன இருந்தாலும் நீங்க இப்படி செஞ்சு அனுப்பிருக்கக்கூடாது – ஆம்லா புலம்பல்

Amla
- Advertisement -

கடந்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுடன் கிரிக்கெட் தொடரில் மோதியது. அதிலும் குறிப்பாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணியை 3 – 0 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.

IND

- Advertisement -

அதிலும் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வியை தென்னாப்பிரிக்கா சந்தித்தது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் துவக்க வீரரான ஆம்லா இதுகுறித்து கூறியதாவது : மொத்தமாக தென்னாப்பிரிக்காவை இந்த தொடரில் இந்திய அணி அடக்கி விட்டார்கள்.

இந்திய அணி பேட்டிங் பந்துவீச்சு பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால் தென்னாப்பிரிக்காவில் பதிலளிக்க முடியவில்லை. தென்ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் முழுவதுமாக சிரமப்பட்டு அதை நாங்கள் பார்த்தோம். முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி பேசும் அளவிற்கு விளையாடியது. அதன்பிறகு ஒரு நூலளவு கூட எங்கள் அணியால் பதிலளிக்க முடியவில்லை .

Ind

சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே தொடரில் இரண்டு முறை இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்க வைத்துள்ளது. என்ன இருந்தாலும் இந்த அளவு தோல்வியை தென் ஆப்பிரிக்க அணி கண்டிருக்க கூடாது இதனால் சற்று வருத்தமாக இருக்கிறது என்று ஆம்லா கூறினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 240 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement