ஆம்லா தென்னாபிரிக்க அணிக்காக செய்து இருக்கும் வரலாற்று சாதனைகள் பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

amla-1
- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். இதுவரை தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகள், 181 ஒருநாள் போட்டிகள் மற்றும் 44 டி20 போட்டியில் விளையாடி உள்ளார் இவர் மொத்தமாக 18672 ரன்களை அடித்துள்ளார். அத்துடன் 55 சதங்களும் 88 அரை சதங்களும் அடித்துள்ளார்.

Amla

- Advertisement -

கடந்த 2008 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய ஆம்லா சிறப்பான ஒரு வரலாற்று சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அதன்படி சர்வதேச வீரர்களில் ஒருநாள் போட்டிகளில் வேகமாக 2000, 3000, 4000, 5000, 6000 மற்றும் 7000 ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையை அவர் கையில் வைத்துள்ளார்.

மேலும் விரைவாகப் பத்து ஒருநாள் போட்டி சாதங்களை அடித்ததும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்காக அவர் செய்த மிகப் பெரிய சாதனையாக அந்த அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 300 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

Amla-1

ஆம்லா தனது கிரிக்கெட் வாழ்க்கையை தாமதமாக ஆரம்பித்ததால் அவரால் பல சாதனைகள் படைக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர் மட்டும் கோலியைப் போன்று இளம் வயதிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்தால் கோலியின் பல சாதனைகள் மட்டுமல்ல சச்சினின் பல சாதனைகள் அவர் தகர்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதனை அவரது கிரிக்கெட் புள்ளிவிவரம் தெளிவாக காண்பிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement