NZ vs RSA : விராட் கோலிக்கு அடுத்து அம்லா படைத்த பிரமாண்டமான சாதனை

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமை

Amla-1
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 25வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், டூபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் மோதின.

nz vs sa

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென்ஆப்பிரிக்கா 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்று நடந்த இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் 34 வயதான துவக்க வீரர் ஹசிம் அம்லா புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அது யாதெனில் குறைந்த போட்டிகளில் விரைவாக 8 ஆயிரம் ஒருநாள் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 8000 ரன்களை அடிக்க அம்லா 182 இன்னிங்ஸ்களை எடுத்துக்கொண்டார்.

amla

இதற்கு முன்னதாக விரைவாக 8000 ஒருநாள் ரன்களை அடித்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். விராட் கோலி 8 ஆயிரம் ரன்களை அடக்க 175 இன்னிங்ஸ்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement