SRH vs DC : மான்கட் முறை மட்டுமல்ல. இப்படியும் அவுட் செய்ய முடியும் – மிஸ்ரா ரன்அவுட்

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை

Mishra
- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரில் அஸ்வின் செய்த மான்கட் முறை ரன்அவுட் அதிக அளவு விவாதிக்கப்பட்ட விடயமாக இருந்தது. அதற்கடுத்து நேற்றைய போட்டியில் பவுலர் த்ரோ செய்யும் போது அதனை தடுக்கும் விதமாக ஓடியதால் பீல்டரை மறைமுகமாக ரன்அவுட் செய்ய விடாமல் வேண்டுமென்றே ஓடியதால் அமித் மிஸ்ராவை 3 ஆவது அம்பயர் அவுட் என்று அறிவித்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இந்த விடயம் அதிக அளவு பேசப்பட்டாலும் இந்த விடயத்தில் அமித் மிஸ்ரா செய்ததுதான் தவறு என்று 100% உறுதியானது. இதனால் அவர் அவுட் கொடுக்கப்பட்டதில் தப்பில்லை என்று ரசிகர்கள் இந்த விடயத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

- Advertisement -

williamson

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குப்தில் 36 ரன்களும், மனிஷ் பாண்டே 30 ரன்களையும் குவித்தனர். டெல்லி அணி சார்பில் கீமோ பால் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Pant

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 56 ரன்களும், பண்ட் 49 ரன்களையும் அடித்தனர். ரிஷப் பண்ட் ஆட்டநாயகனாக தேர்வானார்.

Advertisement