ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறி இந்தியா திரும்பிய சீனியர் வீரர் – வருத்தத்தில் அணி நிர்வாகம்

DC
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் பெரும் பாதிப்பிற்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சில அணி வீரர்கள் நீண்ட நாட்களாக விளையாடாமல் தற்போது விளையாடி வருவதால் அடிக்கடி காயத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் நடப்பாண்டின் ஐபிஎல் சீசனில் பல வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருகின்றனர்.

Dubai

- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் இத்தொடரில் மைதானத்தில் தன்மை, வெப்பநிலை, முறையான பயிற்சிகள் இல்லாமல் விளையாடுவது போன்ற பல காரணங்களால் வீரர்களுக்கு இதுபோன்ற காயங்கள் ஏற்படுகிறது. ஏற்கனவே இந்த தொடரில் ரெய்னா, ஹர்பஜன், மலிங்கா ஆகியோர் இல்லாததால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும் காலியான மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரம் இன்றி விளையாடுவதால் வழக்கமான உற்சாகமும் வீரர்களிடையே இல்லாமல் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து காயமடைந்து வரும் வீரர்களின் நிலைமையை யோசித்தாலும் இந்த தொடரில் சில முக்கிய அணிகளுக்கு சற்று பின்னடைவை சந்திக்க வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லி அணியின் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார் என்று டெல்லி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mishra

கடந்த அக்டோபர் 3ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நித்தீஷ் ராணா கொடுத்த கேட்சை பிடிக்கும் முயற்சியில் அமித் மிஸ்ரா வலது மோதிர விரலில் அடிபட்டார். கேட்ச் பிடிக்க முயன்ற அவர் அந்த பந்து பலமாகத் தாக்கியதால் விரலில் காயம் பெரிதாகியது. இதனால் அவர் மீதி உள்ள போட்டிகளில் பந்துவீச முடியாது என்றும் அவர் இந்தியா திரும்புவார் என்றும் டெல்லி நிர்வாகம் அறிவித்தது.

- Advertisement -

ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு காயம் ஏற்பட்டு கடந்த போட்டியில் தான் மீண்டும் அவர் விளையாட திரும்பினார். இப்போது அமித் மிஸ்ராவுக்கு காயம் ஏற்பட்டு அவர் இந்தியா திரும்ப உள்ளதால் அணி நிர்வாகம் சற்று வருத்தத்தில் உள்ளது. மேலும் சிறப்பாக பந்துவீசி கொண்டிருந்த அவர் இந்த தொடரில் விளையாடாதது அவருக்கும் ஒரு பின்னடைவுதான். ஏனெனில் 37 வயதாகும் அமித் மிஸ்ரா ஐபிஎல் தொடருக்கு மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Mishra

அவர் இத்தொடரில் இருந்து விலகி நாடு திரும்ப நடந்த வழியனுப்பும் நிகழ்வும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சன் ரைசர்ஸ் அணியில் மிட்சல் மார்ஷ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் காயமடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement