ஐ.பி.எல் வரலாற்றில் லாசித் மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை தகர்க்க இருக்கும் அமித் மிஸ்ரா – விவரம் இதோ

Mishra

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 13 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 137 ரன்கள் எடுத்தது. பிறகு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் டெல்லி அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

mi

இந்த போட்டியில் துவக்கத்தில் டிகாக் ஆட்டம் இழந்தாலும் ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தபோது ஒரே ஓவரில் ரோஹித் மற்றும் ஹார்டிக் பாண்டியா என இருவரையும் ஆட்டமிழக்க வைத்து அமித் மிஸ்ரா திருப்பத்தை கொடுத்தார். அதுமட்டுமின்றி அந்த அணியின் பவர் ஹிட்டர்களான பொல்லார்ட் மற்றும் இஷான் கிஷனையும் ஆட்டமிழக்க வைத்து அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் 38 வயதான அமித் மிஸ்ரா இந்த ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதாவது இதுவரை அவர் 152 இன்னிங்ஸ்களில் விளையாடி 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தப் பட்டியலில் அதிக ஐபிஎல் விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வைத்துள்ளார். 122 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ளவர் 170 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

mishra

தற்போது அவருக்கு அடுத்த இடத்தில் 164 விக்கெட்டுகள் உடன் அமித் மிஸ்ரா இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்த சீசனில் இன்னும் 7 விக்கெட்டுகளை எடுத்தால் மலிங்காவின் அதிக விக்கெட்டுகளை சாதனையை அவரால் தகர்க்க முடியும் என்பதால் இந்த சீசனில் அவர் மலிங்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மலிங்கா ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

mishra

ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய டாப்-5 வீரர்கள் வருமாறு:-

1. மலிங்கா-170 விக்கெட்.

2. அமித் மிஸ்ரா -164 விக்கெட்.

3. பிராவோ -156 விக்கெட்.

4. பியூஸ் சாவ்லா -156 விக்கெட்.

5. ஹர்பஜன் சிங் -150 விக்கெட்.