DC vs RR : ஹாட்ரிக் விக்கெட்டை மயிரிழையில் நழுவவிட்ட அமித் மிஸ்ரா – விவரம் இதோ

ஐ.பி.எல் தொடரின் 53 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான்

Amith
- Advertisement -

நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அமித் மிஸ்ரா 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் குறிப்பாக 12 ஆவது ஓவரை வீசியபோது ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் பின்னி ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார்.அதற்கடுத்த பந்தில் கிருஷ்ணப்பா கவுதம் தூக்கி அடிக்க அந்த எளிதான கேட்சை போல்ட் நழுவ விட்டார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இதனால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் அருமையான வாய்ப்பினை தவறவிட்டார் அமித் மிஸ்ரா. இருப்பினும், ஏற்கனவே இரண்டு முறை ஐ.பி.எல் போட்டிகளில் ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.பி.எல் தொடரின் 53 ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு டெல்லி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

- Advertisement -

Rahane

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களை அடித்தது. அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க அதிகபட்சமாக ரியான் பராக் 50 ரன்களை அடித்தார்.

Ishanth

தொடர்ந்து 116 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். ஆட்டநாயகன் விருதினை அமித் மிஸ்ரா பெற்றார்.

Advertisement