DC vs MI : ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்திய அமித் மிஸ்ரா செய்த சாதனை – என்ன தெரியுமா ?

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி

Mishra
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 34 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

rohith

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை அடித்தது. மும்பை அணி சார்பில் அதிககபட்சமாக க்ருனால் பாண்டியா 37 ரன்களும், டிகாக் 35 ரன்களும் மற்றும் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஹார்டிக் பாண்டியா 32 ரன்களை அடித்தார்.

பிறகு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தவான் 35 ரன்களை குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சாளர் ராகுல் சஹர் 4 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹார்டிக் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

ragul chahar

இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா 22 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். இதில் ஒரு சிக்சரும், மூன்று பவுண்டரிகளும் அடங்கும்.இந்த போட்டியில் 6 ஓவரை வீசிய அமித் மிஸ்ரா தான் வீசிய முதல் பந்திலேயே ரோஹித் சர்மாவை போல்டாக்கி வெளியேற்றினார்.

Mishra 1

இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் 150ஆவது விக்கெட்டை நிறைவு செய்தார். இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மொட்டுமொத்தமாக 161 விக்கெட்டுகளுடன் மலிங்கா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மிஸ்ராவுக்கு அடுத்து பியூஸ் சாவ்லா 146 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement