ஐ.சி.சி யின் விதிமுறையையும், இங்கிலாந்து அணியின் வெற்றியையும் வித்தியாசமாக கிண்டல் செய்த – அமிதாப் பச்சன்

amitabh
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி பவுண்டரிகளின் அடிப்படையில் வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. ஐ.சி.சி யின் இந்த விதி குறித்து பலரும் எதிர்ப்பு கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Eng-1

- Advertisement -

ஐசிசியின் இந்த விதிமுறையை இந்தி நடிகர் அமிதாப்பச்சன் வித்தியாசமாக விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : உன்னிடம் 2000 ரூபாய் நோட்டு ஆக இருக்கிறது என்னிடம் 2000 ரூபாய் நான்கு 500 ரூபாய் நோட்டுகளாக இருக்கிறது நம்மில் யார் பணக்காரர்கள் என்று கேட்டதற்கு நான்கு 500 ரூபாய் நோட்டு வைத்தவரே பணக்காரர் என்று icc சொல்வது போல தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார்.

அமிதாப் செய்த இந்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. அமிதாப்பச்சன் வித்தியாசமாகவும், நேரடியாகவும் இங்கிலாந்து அணியையும், icc யின் விதிமுறையையும் கிண்டல் செய்து அவர் குறிப்பிட்ட இந்த ட்வீட் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகஅளவு பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement