IND vs PAK : எல்லா போட்டியும் வீரர்களுக்கு சமம் தான். ஓவரா பண்ணாதீங்க – அமீர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறு

amir
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று 16ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விறுவிறுப்பும் பரபரப்பும் பஞ்சம் இருக்காது.

Pakistan

அதே போன்று இந்த தொடரிலும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது : கிரிக்கெட் வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியும் சமமானதுதான். எல்லா போட்டியும் வெல்ல வேண்டும் என்று அனைத்து வீரர்களும் நினைப்பது சகஜம் தான். அதனை போன்ற ஒரு போட்டியே இந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி.

amir

இதனை இரண்டு நாட்டிலும் உள்ள மீடியாவும் மிகைப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் ரசிகர்களும் இந்த போட்டியை பற்றி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு தேவையில்லாத ஒன்றாக இதனைப் பெரிது படுத்துகிறார்கள். எங்களைப் பொருத்தவரை ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டிதான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி பார்முக்கு திரும்பியது மகிழ்ச்சி அதனை இந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்வேன் என்று அமீர் கூறினார்.

Advertisement