PAK vs AUS : புதிய உலகசாதனையை அசால்டாக செய்த – முகமது ஆமிர்

உலகக் கோப்பை தொடரின் 17வது போட்டி நேற்று ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் எதிராக நடைபெற்றது

amir
- Advertisement -

உலகக் கோப்பை தொடரின் 17வது போட்டி நேற்று ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும் எதிராக நடைபெற்றது .

Pak

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்களை அடித்தது. சிறப்பாக ஆடிய வார்னர் சதம் அடித்தார்.

பிறகு 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி சார்பாக கம்மின்ஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சதமடித்த வார்னர் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த பந்துவீச்சாளரான ஆமீர் புதிய உலக சாதனை ஒன்றை புரிந்துள்ளார். அதன்படி 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அமீர் புரிந்த உலக சாதனை யாதெனில் இதுவரை உலக கோப்பை அரங்கில் வாசிம் அக்ரம், சாகித் அப்ரிடி, முஷ்டாக் போன்ற பாகிஸ்தானிய வீரர்கள் உலக கோப்பை போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்கள். அந்த சாதனையுடன் நேற்று அமீர் தனது சாதனையும் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement