பாகிஸ்தானை பயங்கரவாத நாடு என்று குறிப்பிட்ட ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த – முகமது அமீர்

amir

பாகிஸ்தான் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின் இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு வந்தார்.

பிறகு சூதாட்ட விவகாரம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து தடை செய்யப்பட்ட இவர் மீண்டும் அணியில் இடம்பெற்று சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தற்போது நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதால் நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இது விரும்புகிறேன்.

amir

இந்நிலையில் முகமது அமீரின் ஓய்வு முடிவை ட்விட்டரில் கண்ட ரசிகர் ஒருவர் பாகிஸ்தான் பயங்கரவாத நாட்டை விட்டு நீங்கள் வெளியேறுங்கள் அதுவே உங்களுக்கு நல்லது என்பது போல கருத்தினை பதிவிட்டார். அதற்கு பதிலளித்த முகமது அமீர் உங்களை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் நான் பிளாக் செய்கிறேன் என்று அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் பார்வையாளராக இருக்க தடை செய்துள்ளார்.

- Advertisement -

amir

இதன் மூலம் பாகிஸ்தான் பற்றி தவறாக பேசிய ரசிகருக்கு நேரடியாக தக்க பதிலை அமீர் அளித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த நசீமா மாலிக் என்பவரை திருமணம் செய்த அமீர் விரல் இங்கிலாந்தில் செட்டிலாக திட்டம் இருக்கும் திட்டமிட்டிருப்பதாகவும் இங்கிலாந்து பாஸ்போர்ட்டுக்கு அப்ளை செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement