ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து நாட்டின் குடிமகனாக மாறவுள்ள பாக் வீரர் – அவரே வெளியிட்ட தகவல்

Amir
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரானது, உலகின் தலைசிறந்த டி20 தொடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஐபிஎல்லுக்கு முன்பாக நடக்கும் ஏலத்தில் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் அணிகள், அவ்வீரர்களை தங்களது அணிக்காக விளையாட வைத்து வருகின்றன. இத்தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்க 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு தடைவிதித்தது, இந்திய அரசாங்கமும், பிசிசிஐயும். முதல் ஐபிஎல் தொடரில் ஷாகித் அப்ரிடி, சோயிப் மாலிக் என முன்னனி பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

ஆனால் அதற்குப் பிறகு பிசிசிஐயின் தடையால் எந்த ஒரு பாகிஸ்தான் வீரரும் ஐபிஎல்லில் பங்குபெற முடியாமல் போனது. தற்போது ஐபிஎல்லில் பங்குபெறுவதற்காக இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற இருக்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முஹம்மது ஆமீர். 29 வயதேயான முஹம்மது ஆமீர், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்படி ஒரு திறமையான இளம் வேகப் பந்து வீச்சாளர் 28 வயதிலேயே தனது ஓய்வு முடிவை அறிவித்ததைக் கண்ட உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தற்போது இணையதளத்திற்கு பேட்டியளித்துள்ள முஹம்மது ஆமீர், ஐபிஎல்லில் விளையாடுவதற்காக இங்கிலாந்தின் குடியுரிமையை பெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். அப்பேட்டியில் அவர் கூறும்போது, நான் 6 அல்லது 7 வருடங்கள் கிரிக்கெட் விளையாட முடிவெடுத்துள்ளேன். தற்போது அதற்காக இங்கிலாந்து சென்று குடியேற உள்ளேன். இங்கிலாந்தில் குடயேறிவிட்டால் என்னால் ஐபிஎல் தொடர்களிலும் பங்கேற்க இயலும். இதனை கருத்தில் கொண்டு தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.

மேலும் என் குழந்தை மற்றும் மனைவியும் அங்கு தான் வசிக்கிறார்கள். எனவே நாங்கள் அனைவரும் குடும்பமாக அங்கேயே வாழ விரும்புகிறோம் என்று கூறினார். முஹம்மது ஆமீரின் மனைவி பிறப்பால் ஒரு பிரிட்டிஷ் நாட்டவர் என்பதால் ஆமீருக்கு குடியுரிமை கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. ஒருவேளை ஆமீர் இங்கிலாந்தின் பிரஜையாக மாறிவிட்டால் அவரால் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க இயலும். அவருக்கு குடியுரிமை கிடைக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டே ஐபிஎல் ஏலத்தில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதற்கு முன்னதாக மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான முஹம்மது அசாரும் இதேபோல் செய்து ஐபிஎல்லில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அடுத்த வருட ஐபிஎல் ஏலத்தில் முஹம்மது அமீர் பங்கு பெற்றால், அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

amir

2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய முஹம்மது ஆமீர் இதுவரை அந்த அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். மேலும் 61 ஒரு நாள் போட்டிகளில் 81 விக்கெட்டுகளையும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளையும் எமுத்த முஹம்மது ஆமீர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான மோதலினால் தன்னுடைய இளம் வயதிலேயே, அந்த அணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement