27 வயதிலேயே ஓய்வை அறிவித்த முகமது அமீர். காரணம் இதுதான் – அதிர்ச்சியில் பாகிஸ்தான் ரசிகர்கள்

amir
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதன்பின் இவர் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் செயல்பட்டு வந்தார்.

amir

- Advertisement -

பிறகு சூதாட்ட விவகாரம் காரணமாக பாகிஸ்தான் அணியிலிருந்து தடை செய்யப்பட்ட இவர் மீண்டும் அணியில் இடம்பெற்று சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பாகிஸ்தானுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தற்போது நான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த இருப்பதால் நான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இது விரும்புகிறேன். மேலும் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில் நான் ஓய்வு பெற்றால் எனக்கு பதில் நல்ல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் அதற்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்.

ஆகவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் என்னுடைய கவனத்தை அதிகமாக செலுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் அணிக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார். முகமது அமீர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement