விராட் கோலி கிரேட் பேட்ஸ்மேன்.. ரோஹித்தும் போனாலும் இந்தியா ஈஸியா ஃபில் பண்ணிடும்.. ஆண்டர்சன் பேட்டி

James Anderson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்றுள்ளனர். இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளங்கி வந்த அவர்கள் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றார்கள். அதே போல தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர்கள் விடை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

கடந்த நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. அந்த தொடர்களில் சுமாராக பேட்டிங் செய்த ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தனர். அதனால் அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவர்களை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன.

- Advertisement -

ஆண்டர்சன் பாராட்டு:

அதற்கு முன்பாக ரோஹித் சர்மா கேப்டனாகவே ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த சில நாட்களில் ரோஹித் சர்மாவின் நண்பனாக விராட் கோலியும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் விராட் கோலி தாம் பார்த்த மகத்தான டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று இங்கிலாந்தின் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் பாராட்டியுள்ளார். மேலும் ரோஹித் சர்மா, கோலி விடை பெற்றுள்ளதால் இந்திய பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஐபிஎல் தொடரில் நிறைய தரமான இளம் வீரர்கள் கிடைத்துள்ளதால் இந்திய அணியில் விராட், ரோஹித் இடத்தை எளிதாக நிரப்ப முடியும் என்று கூறும் ஆண்டர்சன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர்கள் கிரேட் பிளேயர். ரோஹித் ஓய்வு பெற்றுள்ளதால் இங்கிலாந்துக்கு புதிய கேப்டன் வருவார். விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் பார்த்த மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர். அவர்கள் ஓய்வால் இந்திய அணியில் நிரப்புவதற்கு மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது”

- Advertisement -

ஈஸியா ஃபில் பண்ணலாம்:

“அவர்கள் இடத்தை நிரப்புவதற்கு இந்திய அணியில் ஏராளமான திறமையான வீரர்கள் உள்ளனர். நீங்கள் ஐபிஎல் தொடரை பார்க்க வேண்டும். இந்தியா தற்போது ஐபிஎல் தொடரிலிருந்து டெஸ்ட் போட்டிகளுக்கு வீரர்களை கொண்டு வருகிறது. அந்த வீரர்கள் ஆக்ரோஷம், அட்டாக் மற்றும் பயமற்ற அணுகுமுறையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறினார்

இதையும் படிங்க: 1151 நாட்கள்.. கபில் தேவ், காலிஸ் போன்ற ஜாம்பவான்களை மிஞ்சிய ஜடேஜா.. மாபெரும் உலக சாதனை

முன்னதாக 2014ஆம் ஆண்டு இளம் விராட் கோலியை தெறிக்க விட்ட ஆண்டர்சன் வெற்றிகரமாக செயல்பட்டார். ஆனால் 2018இல் கம்பேக் கொடுத்த விராட் கோலி அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். 2021 தொடரில் அவர்கள் இருவரிடையே சமமான போட்டி காணப்பட்டது. மொத்தத்தில் விராட் கோலியை 7 முறை ஆண்டர்சன் அவுட் செய்துள்ளார். அவருக்கு எதிராக விராட் கோலி 305 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement