- Advertisement -
உலக கிரிக்கெட்

என்ன ஆனாலும் அதை மாற்றமாட்டோம்.. கனடாவை வீழ்த்திய பின் இந்தியா – பாகிஸ்தானுக்கு சவால்விட்ட அமெரிக்க கேப்டன்

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் கனடாவை 7 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த அமெரிக்கா அற்புதமான வெற்றி பெற்றது. டாலஸ் நகரில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கனடா நவ்னீத் தலிவால் 61, நிகோலஸ் கிர்டோன் 51 ரன்கள் எடுத்த உதவியுடன் 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய அமெரிக்க அணிக்கு ஸ்டீபன் டைலர் 0, கேப்டன் மோனக் பட்டேல் 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 42/2 என தடுமாறிய அணி தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ஆண்ட்ரீஸ் கவுஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அதில் ஆண்ட்ரீஸ் கவுஸ் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 65 (46) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அமெரிக்காவின் சவால்:
ஆனால் எதிர்ப்புறம் ருத்ர தாண்டவம் ஆடிய ஆரோன் ஜோன்ஸ் கனடா பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 4 பவுண்டரி 10 சிக்சருடன் 94* (40) ரன்கள் குவித்தார். அதனால் 17.4 ஓவரிலேயே 197/3 ரன்கள் எடுத்த அமெரிக்கா அபார வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரை வெற்றியுடன் துவங்கியது. இந்நிலையில் குரூப் ஏ சுற்றில் இடம் பெற்றிருக்கும் அமெரிக்க அணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளையும் எதிர்கொள்கிறது.

அந்தப் போட்டிகளில் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பயமற்ற கிரிக்கெட்டை விளையாட உள்ளதாக அமெரிக்க கேப்டன் மோனக் பட்டேல் சவால் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எதிராக கடந்த தொடரில் நாங்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது அணியின் முயற்சி”

- Advertisement -

“கௌஸ் – ஜோன்ஸ் ஆகியோர் சூழ்நிலைகளைச் சிறப்பாக சமாளித்து கனடாவிடம் இருந்த போட்டியை எங்கள் பக்கம் கொண்டு வந்தனர். நாங்கள் நன்றாக பந்து வீசியும் 10 – 15 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்தோம். அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு இவ்வளவு ரசிகர்கள் வருவதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்கள் தொடர்ச்சியாக எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்”

இதையும் படிங்க: 27 போட்டி.. 1377 ரன்கள்.. கடந்த ஆண்டு அசத்திய நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு – ஐ.சி.சி வழங்கிய கவுரவம்

“அதைப் பயன்படுத்தி நாங்களும் தொடர்ந்து இப்படியே விளையாடுவோம். குறிப்பாக பாகிஸ்தான் அல்லது இந்தியா உட்பட எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் எங்களுடைய பயமற்ற கிரிக்கெட்டை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டோம்” என்று கூறினார். முன்னதாக சமீபத்தில் வங்கதேசத்தை 2 – 1 (2) என்ற கணக்கில் தோற்கடித்த அமெரிக்கா கொஞ்சம் நல்ல அணியாகவே செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -