- Advertisement -
இந்திய கிரிக்கெட்

40 வயசே ஆனாலும் அடுத்த உலககோப்பை வரை ரோஹித் சர்மா கேப்டனா இருக்கனும் – அம்பத்தி ராயுடு கருத்து

இந்தியாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி தோல்வியையே சந்திக்காமல் இறுதிப்போட்டி வரை சென்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்து ஒருநாள் உலகக் கோப்பை இழந்தது. ஆனால் அதற்கு அடுத்து நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு முக்கிய தொடர்களையும் இந்திய அணி வெற்றிபெற்று அசத்தியிருந்தது.

ரோஹித் சர்மா 2027 வரை கேப்டனாக விளையாடனும் : அம்பத்தி ராயுடு

இந்நிலையில் அடுத்த 2027 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் உலக கோப்பையை குறிவைத்து இந்திய அணி தங்களது அடுத்த கட்ட நகர்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள வேளையில் ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் அவர்கள் இருவரையும் வயது மூப்பின் காரணமாகவும், ஒரே ஒரு ஃபார்மேட்டில் விளையாடும் வீரர்கள் என்றும் நிர்வாகம் பார்ப்பதால் அவர்களுடைய ஒருநாள் கரியர் முடிவுக்கு வருமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது/ அதிலும் குறிப்பாக அடுத்த 2027-ஆம் ஆண்டிற்குள் ரோகித் சர்மா 40 வயதை எட்டுவார் என்பதனால் அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாட முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 2027 உலக கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தான் இருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தன் கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை 2027 உலக கோப்பை வரை ரோகித் சர்மா தான் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் உலக கோப்பை வெல்லும் தாகம் அவர்கள் இன்னும் இருக்கிறது. அவர் பல உலக கோப்பைகளை வெல்லும் ஆசையில் இருக்கிறார். மேலும் அனுபவ வீரரான அவர் இந்திய அணியில் விளையாடும்போது அது மற்ற இளம் வீரர்களுக்கும் பெரிய உத்வேகத்தை தரும் விதமாக இருக்கும். அதேபோன்று கேப்டன்சியிலும் அவரது செயல்பாடு அசத்தலாக இருக்கிறது.

இதையும் படிங்க : 6 மாசத்துக்கு முன்னாடி அந்த தொடரில் இல்லாத.. சுப்மன் கில் திடீர்னு எங்கருந்து வந்தாரு.. ஸ்ரீகாந்த் கேள்வி

போட்டியின் ஒவ்வொரு தருணத்திலும் அவர் காட்டும் முதிர்ச்சியும், அவர எடுக்கும் முடிவுகளும் மிகச் சிறப்பாகவே இருக்கிறது. எனவே அடுத்த உலக கோப்பை வரை அவர் கேப்டனாக இருந்து கோப்பையை வென்று கொடுத்து சாம்பியன் கேப்டனாக வெளியேற விருப்பப்படுவதாகவும் அம்பத்தி ராயுடு கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -