கருண் நாயர் இன்னும் போகல.. இப்போவாச்சும் இந்திய அணியில் அந்த வாய்ப்பை கொடுங்க.. ராயுடு பேட்டி

Ambati Rayudu
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாட கருண் நாயர் போராடி வருகிறார். 2016இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வீரேந்திர சேவாக்கிற்கு பின் சதத்தை அடித்து சாதனை படைத்தார். ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் பெரிய ரன்கள் குவிக்கத் தவறியதால் கழற்றி விடப்பட்ட அவருக்கு 9 வருடங்களாக மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் மறு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதற்காக மனம் தளராக கருண் நாயர் 2024 – 25 விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பையில் விதர்பா அணிக்காக 863 ரன்கள் விளாசி அசத்தினார். அதனால் 2025 இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய நிறைய வீரர்கள் காத்திருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்க முடியவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்து விட்டார்.

- Advertisement -

டி20யிலும் அசத்தல்:

அடுத்ததாக 2024 – 25 ரஞ்சிக் கோப்பையில் அசத்திய கருண் நாயர் இறுதிப்போட்டியில் சதத்தை அடித்து விதர்பா அணி கோப்பையை வெல்ல உதவினார். அதே வேகத்தில் 2025 ஐபிஎல் தொடரில் நேற்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 89 (40) ரன்கள் அடித்தார். குறிப்பாக பும்ரா உள்ளிட்ட பவுலர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய அவர் 12 பவுண்டரி 5 சிக்ஸருடன் 222 ஸ்ட்ரைக் ரேட்டில் அபாரமாக பேட்டிங் செய்தார்.

இருப்பினும் மற்ற வீரர்கள் அசத்தத் தவறியதால் டெல்லி தோற்றது. இந்நிலையில் கருண் நாயருக்கு ஐபிஎல் முடிந்ததும் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று அம்பாத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ராயுடு கோரிக்கை:

“இது சுத்தமான விடாமுயற்சி. ஏனெனில் இந்தியாவில் விஷயங்கள் சரியாக செல்லவில்லையெனில் நீங்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் எளிதாக இருக்காது. பலரும் அந்த வழியாக சென்றுள்ளார்கள். ஆனால் சிலர் மட்டுமே வெற்றிகரமாக வெளியே வந்திருக்கிறார்கள். கருண் நாயர் அப்படிப்பட்ட ஒருவர். இந்திய அணியில் நீங்கள் தொலைந்து விட்டால் மீண்டும் திரும்புவது கடினம்”

இதையும் படிங்க: டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு விதிக்கப்பட்ட 12 லட்சம் அபராதம் – என்ன நடந்தது?

“உங்களை சுற்றியுள்ள பல விஷயங்களால் மனரீதியாக நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள். பலரும் உங்களை முடிந்ததாக எழுதுவார்கள். கிரிக்கெட் வேகமாக நகரக்கூடிய விளையாட்டு. அது நகர்ந்து விட்டது. ஆனால் கருண் நாயர் இன்னும் நகர்ந்து போகவில்லை. குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவர் கற்றுக்கொண்டு, கடினமாக உழைத்து, கம்பேக் கொடுப்பதை எப்போதும் விட்டதில்லை. எனவே உண்மையிலேயே அவர் இங்கிலாந்து செல்வதற்கான விமானத்தில் இருப்பார் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement