பயிற்சியாளர் அவதாரம் எடுக்கிறார் CSK அதிரடி வீரர்..! எந்த அணிக்கு தெரியுமா..! – யார் தெரியுமா ..?

rayudu

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அம்பதி ராயுடு யோ யோ டெஸ்டில் தேர்ச்சி அடையாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஜுனியர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆலோசகராக நிர்ணயிக்கபட்டுள்ளார் அம்பதி ராயுடு.
rayudu
இங்கிலாந்தில் உள்ள புரோ கோச் யார்க்ஷையர் அகாடமி சார்பில் 17 வயதுக்குட்பட்ட சர்வதேச ஜூனியர்ஸ் அகாடமி போட்டிகள் வருகிற ஜூலை 9 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணிகளும் பங்கேற்கிறது. இதற்காக வரும் ஜூலை 9 ஆம் தேதி இங்கிலாந்து செல்லவுள்ளது.

இந்த தொடரில் சென்னை அணியின் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் ஆலோசகராக இந்திய வீரர் அம்பதி ராயுடுவும் இங்கிலாந்து செல்லவுள்ளார். ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் இரு முறை நேருக்கு நேர் மோதவுள்ளது. இந்த தொடரில் 4 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறும்.
Ambathi Rayudu
இந்த தொடரில் பங்கேற்கும் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் நிறுவித்து வருகின்றது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி அம்பதி ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.