சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சில சீசன்களாகவே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி சிக்ஸர்களை விளாசும் வீரராக இருந்து வருகிறார். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் சிக்சர் துபே என்ற பெயரை பெற்றிருக்கும் இவர் தற்போது இந்திய டி20 உலக கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடித்துள்ளார்.
அதன்படி நடைபெற்று வரும் இந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இடம்பெற்று விளையாடிய இவர் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக இருந்து மாறியுள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரண்டாம் பாதியில் பார்மை இழந்தார்.
டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் அதன் பிறகு சற்று சொதப்பலான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் அவருக்கு இரண்டு பந்துகள் மட்டுமே கிடைத்த வேளையில் இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கெதிரான முக்கியமான போட்டியில் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த போட்டியிலும் 9 பந்துகளை சந்தித்து 3 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரது இடம் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளன.
ஏனெனில் அவர் பேட்டிங் ஆல் ரவுண்டராக இருந்தாலும் இந்திய அணியில் ஏற்கனவே ஆறு பந்துவீச்சாளர்கள் இருப்பதினால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் தேவையில்லை என்றும் அவருக்கு பதிலாக டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சனையோ அல்லது ஜெய்ஸ்வாலையோ கொண்டு வரலாம் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த வகையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய வீரருமான அம்பத்தி ராயுடு கூறுகை : தற்போதைய இந்திய டி20 உலக கோப்பை அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை ஆட வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : விராட் கோலின்னா பாராட்டி தள்ளிருப்பிங்க.. அவர் தான் தனியாளா இந்தியாவை ஜெயிக்க வைக்கிறாரு.. மஞ்ரேக்கர் அதிருப்தி
சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரராக இருந்தும் சக வீரரான ஷிவம் துபேவை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என்று ராயுடு பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தாலும் அணியின் பேலன்ஸ் கருதியே அவர் இவ்வாறு கூறியிருப்பார் என்றும் சில ரசிகர்கள் அவரது இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.