
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டு வரை 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை 204 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடைசியாக சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய அவர் 87 போட்டிகளில் விளையாடி பல அரைசதங்களுடன் 1771 ரன்கள் குவித்தார். அதோடு 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய போது அந்த அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை சிஎஸ்கே அணி விளையாடிய அவர் 61 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஏழு அரைசதம் என 1507 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். சென்னை அணியுடனும் அவர் இரண்டு ஐ.பி.எல் கோப்பைகளை கைப்பற்றியிருந்தார். மொத்தமாக ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை பெற்ற வீரராகவும் இருக்கிறார்.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக தான் விளையாடிய போது களத்தில் அதிக கோபத்தை வெளிப்படுத்த முற்படும்போது தோனி தனக்கு என்ன அட்வைஸ் கொடுப்பார்? என்பது குறித்து ஒரு நேர்காணலில் அம்பத்தி ராயுடு சில சுவாரசியமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது : நான் எப்பொழுதுமே சட்டென்று கோபப்படும் சுபாவம் உடையவன்.
அம்பயர் வைடோ அல்லது நோ பாலோ கொடுக்கவில்லை என்றால் நான் அம்பயரை சற்று கோபமாக பார்ப்பேன். அப்போதெல்லாம் தோனி என்னிடம் “தயவு செய்து நீ உன் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்து”, கையை உயர்த்தி யாரிடமும் பேசாதே, உன்னால் நான் பேர்பிளே பாயிண்ட்டுகளை இழக்க விரும்பவில்லை என்று கூறுவார். மேலும் கோபத்தை தவிர்த்து பேட்டிங்கில் கவனம் செலுத்தும் படி அடிக்கடி என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார்.
இதையும் படிங்க : கருண் நாயரும் வேணாம்.. சாய் சுதர்சனும் வேணாம்.. 3 ஆம் இடத்தில் அவரை ட்ரை பண்ணுங்க – கங்குலி கருத்து
அதன் பின்னர் நானும் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுவேன். அப்படி தோனி அறிவுரை கொடுத்த அதே ஆண்டு தான் அவரே மைதானத்திற்குள் வந்து அம்பயரிடமும் கோபமாக வாதிட்டார். ஆனால் அது என்னால் நடக்கவில்லை அம்பயர்களால் நடந்தது என ராயுடு சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.