கருண் நாயரும் வேணாம்.. சாய் சுதர்சனும் வேணாம்.. 3 ஆம் இடத்தில் அவரை ட்ரை பண்ணுங்க – கங்குலி கருத்து

Ganguly and Abhimanyu
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. அனுபவ வீரர்கள் இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி பெற்ற இந்த வெற்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது.

3 ஆம் இடத்தில் அவரை ட்ரை பண்ணுங்க : சவுரவ் கங்குலி

ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததால் இந்த தொடரை எவ்வாறு சமாளிக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதனை மிக சிறப்பாக கையாண்ட இந்திய அணியானது இந்த தொடரை சமன் செய்து அசத்தியுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாகவும், விராட் கோலிக்கு பதிலாகவும் சரியான மாற்றுவீரர் கிடைத்த நிலையில் புஜாரா விளையாடும் மூன்றாம் இடத்திற்கு மட்டும் முறையான வீரர் இன்னும் கிடைக்கவில்லை. அந்த இடத்தில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மற்றும் கர்நாடக வீரரான கருண் நாயர் ஆகிய இருவரை சோதித்தும் அவர்கள் இருவருமே பெரியளவில் சோபிக்கவில்லை.

இதன் காரணமாக இந்திய அணியில் மூன்றாவது இடத்தில் மட்டும் சரியான மாற்றுவீரர் தேவை என்ற கருத்து இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் மூன்றாவது இடத்தில் அபிமன்யு ஈஸ்வரனை முயற்சி செய்து பார்க்கலாம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது :

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க அபிமன்யு ஈஸ்வரனுக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர் நிச்சயம் வெகு விரைவில் தனது வாய்ப்பினை பெறுவார். இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மூன்றாவது இடத்தில் வெற்றிடம் இருக்கிறது. எனவே அந்த இடத்தில் அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுங்கள் என கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : தல தோனி, ரோஹித்துக்கு அடுத்து 3 ஆவது இந்திய கேப்டனாக சூரியகுமார் யாதவுக்கு – கிடைக்கவுள்ள பெருமை

ஏற்கனவே இங்கிலாந்து தொடர் முடிந்து பேசியிருந்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் கூறுகையில் : நிச்சயம் உங்களுக்கான வாய்ப்பு வரும் என்றும் அதுவும் ஒரு நீண்ட வாய்ப்பாக இருக்கும். ஒரு சில போட்டிகளில் உங்களை நீக்கிவிட மாட்டோம் என்றும் அபிமன்யு ஈஸ்வரனுக்கு உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement