- Advertisement -
ஐ.பி.எல்

இந்த 11 பேர் தான் சி.எஸ்.கே டீமுக்கான பிளேயிங் லெவனுக்கு செட்டாவாங்க.. தேர்வு செய்து அறிவித்த – அம்பத்தி ராயுடு

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல டி20 லீக் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது சீசனானது வருகிற மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

2025-ஆம் ஆண்டிற்கான சி.எஸ்.கே அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை அறிவித்த அம்பத்தி ராயுடு :

இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள வேளையில் அந்த முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன. அதற்கடுத்து மார்ச் 23-ஆம் தேதி இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதன் காரணமாக தற்போது சென்னை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த 2025 ஐபிஎல் தொடருக்கான சி.எஸ்.கே அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் வெளியிட்டு வரும் வேளையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தனது சிஎஸ்கே பெஸ்ட் பிளேயிங் லெவனை கணித்து வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பிளேயிங் லெவனில் : துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகியோருக்கு இடமளித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் ரச்சின் ரவீந்திராவை தேர்வு செய்துள்ளார். மேலும் நான்காவது இடத்தில் மூன்று வீரர்களை தேர்வு செய்துள்ள அவர் அதில் யாராவது ஒருவர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். நான்காவது இடத்திற்காக தீபக் ஹூடா/ராகுல் திரிப்பாதி/விஜய் சங்கர் ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர். அதேபோன்று ஐந்தாவது இடத்தில் வழக்கம் போல ஷிவம் துபேவும் ஆறாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், ஏழாவது இடத்தில் தோனியையும் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

எட்டாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினையும். 9, 10, 11 ஆகிய இடங்களில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக சாம் கரன், மதீஷா பதிரானா, அன்சுல் கம்போஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அந்தவகையில் அம்பத்தி ராயுடு தேர்வு செய்து அறிவித்துள்ள சி.எஸ்.கே அணியின் பெஸ்ட் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்.. மாற்றுவீரர் அறிவிப்பு – விவரம் இதோ

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) டேவான் கான்வே, 3) ரச்சின் ரவீந்திரா, 4) தீபக் ஹூடா/ராகுல் திரிப்பாதி/விஜய் ஷங்கர், 5) ஷிவம் துபே, 6) மஹேந்திர சிங் தோனி, 7) ரவீந்திர ஜடேஜா, 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) சாம் கரன், 10) மதீஷா பதிரானா, 11) அன்சுல் கம்போஜ்.

- Advertisement -