லாரா மாதிரி திறமையுடைய வைபவ்.. யார் பேச்சையும் கேட்காம அதை கத்துக்கிட்டா இன்னும் அசத்தலாம்.. ராயுடு பேட்டி

Ambati Rayudu 2
- Advertisement -

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி சமீப காலங்களில் அண்டர்-19 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடினார். அதனால் ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகமான அவர் தனது முதல் பந்திலேயே சிக்ஸரை பறக்க விட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அப்படியே குஜராத்துக்கு எதிரானப் போட்டியில் 35 பந்துகளில் சதத்தை அடித்த அவர் நிறைய சாதனைகளை படைத்தார்.

அதனால் இங்கிலாந்தில் நடைபெற்ற அண்டர்-19 ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக விளையாடிய சூரியவன்சி 48, 45, 86, 143 என நல்ல ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக 4வது போட்டியில் பட்டையை கிளப்பிய அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் அடித்தார். அப்போட்டியிலும் சில சாதனைகளை படைத்த அவர் தன்னை வருங்கால நட்சத்திரமாக அடையாளப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

லாரா போன்ற திறமை:

இந்நிலையில் சூரியவன்சியிடம் ஜாம்பவான் பிரைன் லாரா போன்ற பேட் ஃஸ்பீட் மற்றும் ஃலிப்ட் இருப்பதாக முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். ஆனால் அதிகப்படியான வேகத்தில் பேட்டை சுழற்றுவதால் சூரியவன்சியின் தடுப்பாட்டத்தில் கட்டுப்பாடு இல்லை என்றும் ராயுடு கூறியுள்ளார். எனவே அவர் பேட்டின் வேகத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் திறமையை கற்றுக்கொண்டால் இன்னும் அசத்தலாக விளையாட முடியும் என்று ராயுடு தெரிவித்துள்ளார்.

நிறைய நபர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் வைபவ் தன்னுடைய வழியில் விளையாட வேண்டும் என்றும் தெரிவிக்கும் ராயுடு இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவருடைய பேட் வேகம் அற்புதமாக இருக்கிறது. அதை யாரும் மாற்ற மாட்டார்கள் என்று நம்புகிறேன். இங்கிருந்து அவர் பிரையன் லாரா போல இன்னும் முன்னேறுவார். வேண்டுமானால் லாரா போன்றவரிடம் சென்று பேசுங்கள்”

- Advertisement -

ராயுடு பாராட்டு:

“அவரிடமும் இதே போன்ற பேட் லிஃப்ட் இருக்கிறது. இருப்பினும் நீங்கள் மென்மையான கைகளுடன் பந்தை தடுத்து தற்காப்பு ஆட்டத்தை விளையாட முயற்சிக்கும் போது, எப்படி பேட்டின் வேகத்தைக் கட்டுப்படுத்துவது என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். அதைக் கற்றுக் கொண்டால் அவர் இன்னும் சிறந்த திறமையுடைய வீரராக மாறுவார்”

இதையும் படிங்க: ரோஹித்துக்கு பின் கேப்டனாக கில்லை விட ஸ்ரேயாஸ் தான் தகுதியானாவர்.. காரணம் இதான்.. ராயுடு

“அவர் நிறைய மக்களின் பேச்சுகளை கேட்கக்கூடாது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மக்களுடைய பேச்சுகளை கேட்காதீர்கள், உங்களுடைய திறமைக்கு ஆதரவளியுங்கள். பயிற்சியாளர்களும் அவருக்கு அதிக உபதேசம் செய்யாமல் சுதந்திரமாக விளையாட விட வேண்டும். ஏனெனில் அவரிடம் ஏற்கனவே நல்ல திறமை இருக்கிறது. அப்படிப்பட்ட திறமையான அவருடன் ராஜஸ்தான் அணியில் ராகுல் டிராவிட் இருக்கிறார். ராகுல் பாய் அவரைப் பார்த்துக் கொள்வார்” என்று கூறினார்.

Advertisement