அடுத்த போட்டியிலும் வாய்ப்பை தவறவிட இருக்கும் சென்னை அணியின் நட்சத்திர வீரர் – அதிர்ச்சியில் நிர்வாகம்

CSK
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடரில் துவங்கி தற்போது வரை ஐந்து போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. ஒவ்வொரு அணியும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெறுவதற்காக முன்புறமாக உழைத்து வருகின்றது. வீரர்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் எவ்வளவு தான் தங்களது உடலை காயம் படாமல் பார்த்துக் கொண்டாலும் பல வீரர்கள் வேறு வழியில்லாமல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

Rayudu

- Advertisement -

அவர்களுக்கு மாற்று அணி வீரர்களும் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அம்பத்தி ராயுடு மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அபாரமாக அரைசதம் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.அதற்கு அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு களமிறங்கவில்லை.

இதன் காரணமாக அந்த அணி தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. போட்டி துவங்கும் போது ராய்டு 100% போட்டியில் ஆட தகுந்த உடல் தகுதியில் இல்லை அதன் காரணமாக அவரால் இந்த போட்டியில் ஆட முடியாது என்று தோனி கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அவ்வளவு பெரிய காயம் ஒன்றும் இல்லை தொடைப் பகுதியில் சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டு உள்ளது.

Rayudu 3

இதன் காரணமாக இன்னும் சில போட்டிகளில் அம்பத்தி ராயுடு ஆடுவது கடினம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசிவிஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் வெள்ளிக்கிழமை அன்று டெல்லி அணியுடன் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement