மாத்தி எழுதாதீங்க.. மும்பைக்கு விளையாடினால் மூளை வெடிச்சுரும்.. ஆனா சிஎஸ்கே வேற மாதிரி டீம்.. ராயுடு விளக்கம்

Ambati Rayudu 2
- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக ஜொலிக்கின்றன. வரலாற்றில் பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் இத்தனை வருடங்களாகியும் ஒரு கோப்பையை வெல்வதற்கே தடுமாறி வருகின்றன. மறுபுறம் அசால்டாக 5 கோப்பைகளை அலமாரியில் அடுக்கியுள்ள மும்பை மற்றும் சென்னை அணிகள் மற்ற அணிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது என்றே சொல்லலாம்.

அந்த 2 வெற்றிகரமான அணிகளிலும் முன்னாள் இந்திய வீரர் அம்பாதி ராயுடு நீண்ட காலம் விளையாடிய பெருமைக்குரியவராக உள்ளார். அந்த சூழ்நிலையில் ஒரு போட்டியில் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தாலும் மும்பை அணி நிர்வாகம் வீரர்களை சும்மா விட மாட்டார்கள் என்று சமீபத்தில் ராயுடு தெரிவித்திருந்தார். மறுபுறம் சென்னை அணி முடிவுகளை பார்க்காமல் வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றும் ராயுடு கூறியிருந்தார்.

- Advertisement -

ராயுடு கருத்து:
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணி செயல்முறையில் அதிகமாக கவனம் செலுத்துவார்கள். அவர்கள் போட்டியின் முடிவை பற்றி ஆராய மாட்டார்கள். அவர்களுடைய மனநிலை தோல்வியால் மாறாது. மும்பை கொஞ்சம் வித்தியாசமானது. மும்பை அணியினர் பெரும்பாலும் வெற்றியை விரும்புவார்கள். அவர்களுடைய கலாச்சாரமும் வெற்றியை மையப்படுத்தியே இருக்கும்”

“அவர்கள் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்று சொல்வார்கள். அந்த வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்டன. ஆனால் கடைசியில் பார்க்கும் போது இரு அணிகளுமே கடினமாக உழைக்கக் கூடியவை. அதே சமயம் சிஎஸ்கே நல்ல சூழ்நிலையை கொண்ட அணியாக நான் கருதுகிறேன். மறுபுறம் மும்பை அணியில் நீங்கள் நீண்ட நேரம் செலவிட்டால் உங்களுடைய மூளை வெடித்து விடும்”

- Advertisement -

“மும்பை அணியில் விளையாடி என்னுடைய ஆட்டத்தில் நான் நிறைய முன்னேற்றங்களை சந்தித்தேன். நீங்கள் வெற்றி பெறாமல் போனால் அங்கே சாக்கு சொல்ல முடியாது. சிஎஸ்கே அணியில் எந்த இடையூறுகளும் இல்லாமல் நன்றாக இருக்கலாம்” என்று கூறினார். அதை வழக்கம் போல சில ஊடகங்கள் மும்பையை விட சென்னை அணி சிறந்தது என ராயுடு என்ன சொன்னதாக எழுதின. இந்நிலையில் தன்னுடைய கருத்துக்கள் மாற்றி எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ராயுடு மும்பையைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: ஜடேஜாவுடன் அவரை 2024 டி20 உ.கோ 2வது ஸ்பின்னரா செலக்ட் பண்ணுங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

“மும்பை இந்தியன்ஸ் பற்றி என்னுடைய கருத்துக்கள் வேறு விதமாக திரிக்கப்பட்டுள்ளன. மும்பை அணியில் வித்தியாசமான செயல்முறைகளுடன் வீரர்கள் முன்னேறுவதற்கான நேர்மறையான அழுத்தம் இருக்கும் என்றே நான் சொன்னேன். அது இந்திய அணிக்காகவும் மும்பை அணிக்காகவும் அவர்கள் உருவாக்கிய திறமையான வீரர்களை காட்டுகிறது. மும்பை அணியில் விளையாடிய 8 வருடங்களை நான் விரும்பினேன். தற்போது மும்பை வேகமாக வெற்றி பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement