பிரிட்ஜ் கண்ணாடியை உடைத்த பாகுபலி அம்பத்தி ராயுடு. இப்படி ஒரு முரட்டு அடியா ?

Rayudu
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியானது, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று முடிந்தது. இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்தது. இந்த போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கெய்க்வாட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

அதன்பிறகு டு பிளசிஸ் மற்றும் மோயின் அலி ஜோடி சிறப்பாக விளையாடி 2 ஆவது விக்கெட்டிற்கு 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மொயின் அலி 58 ரன்கள் எடுத்து நிலையிலும், டுப்லஸ்ஸிஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு ரெய்னா 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ராயுடு மற்றும் ஜடேஜா சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்தனர்.

இறுதி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ராயுடு 27 பந்துகளில் 7 சிக்சர் மற்றும் 4 பவுண்டரி என 72 ரன்கள் அடித்து மும்பை அணியை மிரள விட்டார். அவர் அடித்த இந்த ஏழு சிக்ஸர்களில் பல இமாலய சிக்சர்களும் இருந்தன. அதில் பும்ரா வீசிய பந்தில் லாங் ஆஃப் திசையில் அடிக்கப்பட்ட சிக்ஸர் மும்பை அணி வீரர்கள் அமர்ந்து இருந்த இடத்திற்கு அருகில் உள்ள ஃப்ரிட்ஜில் பட்டு அதன் கண்ணாடியை உடைத்தது. ராயுடு அடித்த இந்த மிரட்டலான சிக்ஸர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement