அரசியல் பண்ணி அவரோட மகனுக்காக என் கேரியரை கெடுத்தாரு – முன்னாள் பிசிசிஐ தலைவர் மீது ராயுடு பரபரப்பான குற்றசாட்டு

Ambati-Rayudu
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வெற்றிகரமான அணியாக சாதனை படைத்த எம்எஸ் தோனி தலைமையில் நடந்த சென்னைக்கு விளையாடிய அம்பத்தி ராயுடு கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். குறிப்பாக ஃபைனலில் முக்கிய தருணத்தில் அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து வெற்றியில் பங்காற்றிய அவர் வரலாற்றில் அதிக ஐபிஎல் கோப்பைகளை வென்ற வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை படைத்து ஜாம்பவானாகவே விடை பெற்றார். இருப்பினும் அவருடைய சர்வதேச இந்திய கேரியர் வன்மதாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தப்பட்டது என்றால் மிகையாகாது.

ஆம் ஹைதராபாத்தைச் சேர்ந்த அவர் இளம் வயதில் கடந்த 2003 முதலே உள்ளூர் போட்டியில் விளையாடத் துவங்கிய அவர் 2010ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பைக்காக விளையாட அறிமுகமாகி 2013 கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்திய அணிக்காக அறிமுகமான அவர் ஆரம்பத்தில் அந்த வாய்ப்பை தக்க வைக்க தவறிய போதிலும் 2015, 2017 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல உதவிய நிலையில் 2018ஆம் ஆண்டு சென்னை அணியில் 602 ரன்கள் குவித்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

ராயுடு குற்றசாட்டு:
அதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் சிறந்த செயல்பாடுகள் வெளிப்படுத்தி 2019 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவராக காத்திருந்தார். இருப்பினும் 4வது இடத்தில் பேட்டிங் செய்பவர் பவுலிங் செய்பவராக இருக்க வேண்டும் என கருதிய அப்போதையே எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு தமிழகத்தின் விஜய் சங்கரை தேர்வு செய்து அவரை கழற்றி விட்டது.

அதற்காக 3டி ட்வீட் போட்டு அதிருப்தியை வெளிப்படுத்தியதை வன்மமாக எடுத்துக்கொண்ட தேர்வுக்குழு மேற்கொண்டு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்ததால் 33 வயதிலேயே ராயுடு ஓய்வு பெற்றார். இந்நிலையில் இந்திய அணியை போலவே ஹைதராபாத்துக்காக விளையாடிய போது அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த முன்னாள் இந்திய வீரர் சிவ்லால் யாதவ் அவருடைய மகன் அர்ஜுன் யாதவ் இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்பதற்காக தம்முடைய கேரியரில் விளையாடியதாக ராயுடு பரபரப்பான குற்றம் சாட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது கேரியரில் இளம் வயதிலேயே ஹைதராபாத் மாநில அணிக்காக விளையாடிய போது அரசியல் ஆரம்பித்து விட்டது. சிவ்லால் யாதவ் அவர்களின் மகன் அர்ஜுன் யாதவ் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில் துன்புறுத்தப்பட்டேன். மேலும் அர்ஜுன் யாதவை விட நான் சிறப்பாக விளையாடி வந்ததால் அவர்கள் என்னை நீக்க முயன்றனர். அப்போது நான் வெறும் 17 வயது மட்டுமே நிரம்பியிருந்தேன். இருப்பினும் அர்ஜுன் யாதவ் இந்திய அணிக்காக விளையாட விரைவில் தேர்வாக விரும்பினார்”

“அப்படி அவர் விளையாடிய காரணத்தால் அந்த சமயத்தில் நான் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெறவில்லை. அதற்காக நான் என்ன செய்ய முடியும்? அந்த வகையில் ஹைதராபாத் மாநில வாரியத்தில் புற்றுநோய் என்பது என்னுடைய இளமை கேரியரிலேயே ஆரம்பித்தது. தற்போது அது 4வது நிலையை எட்டியுள்ளது. அது பிசிசிஐ தலையிட்டால் மட்டுமே மாறும். இல்லையேல் யாரும் ஹைதராபாத் மாநில நிர்வாகத்தை சரி செய்ய முடியாது. அத்துடன் 2003 – 04 சீசனில் இந்தியா ஏ அணிக்காக நான் சிறப்பாக விளையாடினேன்”

- Advertisement -

“ஆனால் 2004இல் மாறிய தேர்வுக்குழு கமிட்டியில் சிவ்லால் யாதவுக்கு நெருங்கியவர்கள் பொறுப்பேற்றதால் எனக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்கள் என்னிடம் 4 வருடங்கள் வரை யாரும் பேச அனுமதிக்கவில்லை. மேலும் போட்டிக்கு முந்தைய நாளில் சிவ்லால் யாதவியின் தம்பி குடித்து விட்டு வீட்டின் முன் வந்து மோசமாக திட்டுவது வழக்கமாகும். அவர்கள் என்னை மனரீதியாக காயப்படுத்த முயன்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க:டீம் செலக்டரே போன் பண்ணி கூப்பிட்டும் துலீப் டிராபியில் விளையாட மறுத்த விரிதிமான் சாஹா – என்ன நல்ல மனசுயா உனக்கு

முன்னதாக 2005இல் ஹைதராபாத் அணியை விட்டு ஆந்திராவுக்கு மாறிய ராயுடு அந்த வருடம் நடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் அர்ஜுனுடன் சண்டையில் ஈடுபட்டார். அதே போல கேரியரை கெடுத்ததாக கூறும் சிவ்லால் இந்தியாவுக்காக 35 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் 1979 – 1987 காலகட்டங்களில் விளையாடி ஹைதராபாத் வாரிய தலைவராக இருந்ததுடன் 2014இல் தற்காலிக பிசிசிஐ தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement