பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் நிச்சயம் சி.எஸ்.கே அணியில் இவர் விளையாடுவார் – உறுதியான தகவல்

- Advertisement -

இந்த 14-ஆவது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகம் செப்டம்பர் 19ஆம் தேதி துபாய் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஒருகட்டத்தில் சி.எஸ்.கே அணி பவர்பிளே ஓவர்களின் முடிவில் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ruturaj 1

- Advertisement -

அதன்பின்னர் தனியாளாக போட்டியை கொண்டு சென்ற ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சிஎஸ்கே அணிக்கு வெற்றியை தேடி தந்தார். இந்நிலையில் இந்தப் போட்டியில் விளையாடிய அணியின் சீனியர் வீரர் அம்பத்தி ராயுடுவின் கையில் பந்து தாக்கியதால் பேட்டிங் செய்யாமல் பாதியிலேயே வெளியேறிய அவர் அதன்பின்னர் பீல்டிங் செய்யவும் வரவில்லை.

இதனால் அடுத்த போட்டியில் அம்பத்தி ராயுடு பங்கேற்பாரா ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்திருந்தது. அதற்கான தெளிவான விளக்கம் ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது ராயுடுவின் எக்ஸ்-ரே குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ள அறிக்கையில் :

rayudu 1

ராயுடுவின் எக்ஸ்-ரே ரிப்போர்ட் தற்போது எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் எந்தவித எலும்பு முறிவும் ராயுடுவுக்கு ஏற்படவில்லை என்றும் பந்து தாக்கியதில் உட்காயம் மட்டும் தான் ஏற்பட்டுள்ளது. அதுவும் தற்போது குணமடைந்து வருகிறது எனவே நிச்சயம் 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.சி.பி அணிக்கெதிரான போட்டியில் ராயுடு பங்கேற்பார் என காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

rayudu

கையில் பந்து தாக்கியதன் காரணமாக கடுமையான வலியால் வெளியேறி ராயுடு அடுத்த போட்டியில் விளையாடவில்லை என்றால் அது சி.எஸ்.கே அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையிலிருந்து தற்போது ராயுடு விளையாடப்போகிறார் என்ற உறுதியான தகவலின் மூலம் சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement