ஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும், இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மதிப்பு மிக்க வீரர் என்ற பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளது ஒரு தனியார் நிறுவனம்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 8 அணிகள் பங்குபெற்றது, அதில் பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்குபெற்றனர். ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு கிரிக்கெட் வீரர்களை கோடி கணக்கில் பணத்தை கொடுத்து ஏலமெடுத்தனர். தற்போது ஹன்சா ரிசர்ச் என்ற தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஐபிஎல் தொடரில் மதிப்பு மிக்க வீரர்கள் பட்டியலை தயாரித்துள்ளது.
ஒரு வீரர் அடித்த ரன், அரை சதம், சதம் , அவர் எடுத்துள்ள விக்கெட், பிடித்த கேட்ச் ஆகியவற்றை கொண்டு அந்த வீரருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் ஏலம் எடுக்கப்பட்ட தொகை அதிமாக இருந்தால் அவர்கள் பட்டியலில் பின் தங்கிவார்கள்.
உதாரணமாக சென்னை கேப்டன் தோனி எடுத்துக் கொள்வோம் இந்த சீசனில் அவர் பெற்ற சம்பளம் ரூ.15 கோடி, ஆனால் அவர் பெற்ற புள்ளிகள் 2450. எனவே அவருக்கு ஒரு புள்ளிக்கு 61,224 ருபாய் பணத்தை அந்த அணி அவருக்கு செலவழித்துள்ளது. அந்த வகையில் மற்ற வீரர்களுக்கு ஒரு அந்த அணி ஒரு புள்ளிக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறது என்பதை காணலாம்.
விராட் கோலி (17 கோடி) – மொத்த புள்ளிகள் 2225, ஒரு புள்ளிக்கு 76,404 ரூபாய்
அம்பாதி ராயுடு (2.2 கோடி) – மொத்த புள்ளிகள் 2734, ஒரு புள்ளிக்கு 8 ஆயிரம் ரூபாய்
வாட்சன் (4 கோடி) – மொத்த புள்ளிகள் 3330 , ஒரு புள்ளிக்கு .12 ஆயிரம் ரூபாய்
ரோஹித் ஷர்மா (15 கோடி) – மொத்த புள்ளிகள் 1252 , ஒரு புள்ளிக்கு 1,19,808 ரூபாய்
ஹர்சால் படேல் (2 கோடி) – மொத்த புள்ளிகள் 830 , ஒரு புள்ளிக்கு 860 ரூபாய்