எல்லாரும் தோனி ரசிகர்களாக வந்தாலே போதும்.. சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆஸி கேப்டன் ஹீலி கோரிக்கை

Alyssa Healy
- Advertisement -

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி துவங்குகிறது. வரலாற்றில் 13வது முறையாக நடைபெறும் அத்தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. அந்தத் தொடரில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் விளையாட உள்ளன.

அதில் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் களமிறங்குகிறது. வரலாற்றில் இந்திய மகளிர் அணி ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை வென்றதில்லை. எனவே எம்எஸ் தோனி தலைமையிலான ஆடவர் அணி 2011 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்றது போல இம்முறை இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

- Advertisement -

சிஎஸ்கே – தோனி ரசிகர்களுக்கு:

அந்த நிலைமையில் 2025 உலகக் கோப்பை கேப்டன்கள் புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த நிகழ்வில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி இந்தியாவில் தங்களுக்கு போதுமான ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி விளையாடி வருகிறார். அவருக்கு சென்னையை தாண்டி கொல்கத்தா, டெல்லி உட்பட இந்தியாவின் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்களின் சமூக ஆதரவு கிடைப்பது வழக்கமாகும். சொல்லப்போனால் தோனிக்காக உள்ளூர் அணியை விட ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்து சிஎஸ்கே அணிக்காக ஆதரவு கொடுப்பார்கள்.

- Advertisement -

ஆஸி கேப்டன் கோரிக்கை:

அதனால் தோனிக்கு மட்டுமே அனைத்து மைதானங்களும் சொந்த மைதானங்கள் போல் இருக்கும் என்று லக்னோவுக்காக விளையாடும் இந்திய வீரர் ரவி பிஸ்னோய் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதே போல இந்தியாவில் இருக்கும் சி.எஸ்.கே ரசிகர்கள் தோனியின் ஜெர்சியை அணிந்து வந்து தங்களுக்கு ஆதரவளிக்குமாறு ஹீலி கேட்டுக் கொண்டுள்ளார். ஏனெனில் சிஎஸ்கே அணியின் மஞ்சள் ஜெர்ஸி தங்களுடைய ஜெர்ஸியைப் போன்ற உணர்வையும் ஆதரவையும் கொடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 113க்கு அவுட்.. 167 ரன்ஸ்.. ஆஸியை சொந்த மண்ணில் தெறிக்க விட்ட இளம் இந்தியா.. ஒய்ட்வாஷ் வெற்றி

இது பற்றி ஹீலி தெரிவித்தது பின்வருமாறு. “இந்திய ரசிகர்கள் தங்களுடைய சென்னை எம்.எஸ். தோனி சட்டைகளை அணிந்து வர நான் ஊக்கமளிக்கிறேன். ஏனெனில் அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை அணிந்து வந்தாலே சிறப்பாக இருக்கும். எனவே ஆம் ரசிகர்கள் கூட்டங்களில் சில மஞ்சள் நிறத்தைப் பார்ப்பது எங்களுக்கு நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement