சுப்மன் கில்லை அவுட்டாக்க பெரிய திறமைலாம் வேணாம்.. இங்கிலாந்து இதை செஞ்சாவே போதும்.. ஹீலி கிண்டல்

Alyssa Healy
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 3வது போட்டியில் போட்டியில் இந்தியாவை 22 ரன்கள் தோற்கடித்த இங்கிலாந்து 2 * 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் 193 இலக்கைத் துரத்திய இந்தியாவுக்கு டாப் ஆர்டரில் ராகுல் 39 ரன்கள் எடுத்ததைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை.

அதனால் லோயர் மிடில் ஆர்டரில் ஜடேஜா டெய்ல் எண்டர்களுடன் சேர்ந்து 61* ரன்கள் அடித்து போராடியும் இந்தியாவால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தத் தொடரில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட சுப்மன் கில் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்து அசத்தினார். 2வது போட்டியில் 430 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

திறமை வேண்டாம்:

அதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 3வது போட்டியிலும் ஓரளவு நன்றாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போட்டியில் அரை சதம் கூட அடிக்காத அவர் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தார். சொல்லப்போனால் 3வது நாள் மாலையில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்த ஜாக் கிராவ்லியிடம் மோசமான வார்த்தைகளை சொல்லி கில் வாக்குவாதம் செய்தார்.

அதனால் கோபமடைந்த இங்கிலாந்து அணியினர் கில் தலைமையிலான இந்திய அணிக்கு நெருப்பாக பதிலடி கொடுத்து தோல்வியைப் பரிசளித்தனர். இந்நிலையில் இந்திய கேப்டன் சுப்மன் கில்லை அவுட்டாக்க பெரிய திறமையெல்லாம் வேண்டாம், ஸ்லெட்ஜிங் செய்து மனதளவில் பயமுறுத்தினாலே போதும் என்று ஆஸ்திரேலிய மகளிரணி கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார். இது பற்றி வில்லோ ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஸ்லெட்ஜிங் பயம் போதும்:

“எதிரணிகள் கில்லிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லும் போது அது அவரை சிறிது சிறிதாக ஆட்டிப் படைக்கும் என்பதைப் பற்றி நான் படித்துள்ளேன். முதல் 2 போட்டிகளில் அவர் எவ்வளவு வெற்றிகரமாக செயல்பட்டார் என்பதை அறிந்து இங்கிலாந்து அதில் பாதியைச் செய்தால் கூட இது தான் நடக்கும். பொதுவாக ஒரு அணி எதிரணியின் கேப்டன் மீது கடினமாக செல்வார்கள்”

இதையும் படிங்க: விராட், ரோஹித்தை பிசிசிஐ கட்டாயமாக ஓய்வு பெற வைத்ததா? ஒன்டே ரிட்டையர்மென்ட் எப்போது? ராஜிவ் சுக்லா விளக்கம்

“நீங்கள் கேப்டனை மலிவாக அவுட்டாக்க வேண்டும் அல்லது அவரைச் சுற்றி கூண்டு போல சேர்ந்து சத்தமிட்டு அச்சுறுத்தினால் வெற்றி உங்கள் வழியில் இருப்பதாக உணர்வீர்கள். எனவே சுப்மன் கில்லிடம் அந்த பலவீனம் இருப்பதை இங்கிலாந்து கொஞ்சம் மோப்பம் பிடித்து பயன்படுத்தினால் கூட வெற்றி பெறலாம். அதையே தொடர் முழுவதும் அவரிடம் அவர்கள் கடினமாக செய்வார்கள்” என்று கூறினார்.

Advertisement