இந்திய அணி ஒரே நேரத்தில் 2 சுற்றுப்பயணத்தில் விளையாடுவது இது முதல் முறை கிடையாது – ஏற்கனவே விளையாடியிருக்காம்

IND
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜூன் மாதம் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று மிகப்பெரிய டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, அஷ்வின், ஜடேஜா, ராகுல், பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர். அதேவேளையில் ஜூலை மாதம் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மற்றொரு தொடரில் விளையாடவும் பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. இதனால் ஒரே நேரத்தில் 2 இந்திய அணி 2 தொடர்களில் விளையாடவுள்ளது.

IND

- Advertisement -

முதன்மை இந்திய வீரர்களை தவிர்த்த மற்றொரு இந்திய இளம் அணி தவான் தலைமையில் இலங்கை செல்ல இருக்கிறது என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் இந்திய அணி இரண்டு சுற்றுப் பயணங்களில் கலந்துகொண்டு விளையாட இருக்கிறது. இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள், நிபுணர்கள் என அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்திய அணி இது போன்று இரண்டு அணிகளுடன் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்று ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே இந்திய அணி ஒரு முறை இரண்டு அணிகளோடு விளையாடியுள்ள இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajay jadeja

அதன்படி 1998ஆம் ஆண்டு காமன்வெல்த் தொடருக்காக இந்திய அணி விளையாட சென்றிருந்தது. அதேவேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஷார்ஜா கொக்கோ கோலா தொடரும் நடைபெற்றது. இதன் காரணமாக காமன்வெல்த் தொடருக்கு ஒரு அணியும், ஷார்ஜா கோப்பைக்கு ஒரு அணியும் என இரண்டு அணி பங்கேற்று விளையாடியது. அஜய் ஜடேஜா தலைமையிலான ஒரு இந்திய அணியில் சச்சின், கும்ப்ளே, லட்சுமன் என காமன்வெல்த் தொடரில் ஒரு அணி பங்கேற்றது.

Azharuddin

அதே சமயத்தில் ஷார்ஜா தொடரில் அசாருதீன் தலைமையில் கங்குலி, டிராவிட், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் என மற்றொரு அணியும் கலந்துகொண்டு விளையாடினார். இதில் காமன்வெல்த் தொடரை இந்திய அணி இழந்தாலும், ஷார்ஜா கோப்பையை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியிருந்தது. இதன் காரணமாக இந்திய அணி ஏற்கனவே இரண்டு அணிகளுடன் விளையாட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement