என்னால செஞ்சுரி அடிச்ச சச்சின்.. கவாஸ்கர், கோலியை விட சிறந்தவர்.. கபில் தேவ் பிடித்தவர்.. ஆலன் லம்ப் பேட்டி

Allan Lumb
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் கடந்த 3 தலைமுறைகளின் மகத்தான பேட்ஸ்மேன்களாக போற்றப்படுகிறார்கள். அதில் மண்டையை பதம் பார்க்கக்கூடிய வகையில் வெறித்தனமான வேதத்தில் வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை கவாஸ்கர் ஹெல்மெட் போடாமலேயே அற்புதமாக எதிர்கொண்டார். அறிமுகத் தொடரிலேயே 700க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த அவர் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையையும் கவாஸ்கர் படைத்தார். அதைத்தொடர்ந்து 16 வயதில் அறிமுகமான சச்சின் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் 100 சதங்கள் அடித்த சச்சின் ஆல் டைம் மகத்தான பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.

- Advertisement -

சிறந்த பேட்ஸ்மேன்:

அதற்கடுத்ததாக வந்த விராட் கோலி டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் சீரான வேகத்தில் ரன்களை குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படும் அவரும் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக பாராட்டப்படுகிறார். இந்நிலையில் அந்த மூவரில் தம்மைப் பொறுத்த வரை சச்சின் டெண்டுல்கர் சிறந்த இந்திய பேட்ஸ்மேன் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆலன் லம்ப் தெரிவித்துள்ளார்.

ஓல்ட் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் தாம் கோட்டை கேட்ச்சை பயன்படுத்திய சச்சின் முதல் சதத்தை அடித்ததாகவும் அவர் நினைவு கொடுத்துள்ளார். இது பற்றி லம்ப் பேசியது பின்வருமாறு. “சச்சின் சிறந்த பேட்ஸ்மேன் என்று எளிதாக சொல்வேன். அவர் 18 வயதில் இருந்த போது எங்களுக்கு எதிராக விளையாடினார். ஸ்லிப் பகுதியில் அவர் கொடுத்த கேட்ச்சை நான் தவற விட்டேன்”

- Advertisement -

பிடித்த இந்தியர் கபில்:

“அதைப் பயன்படுத்திய அவர் சதத்தை அடித்தார். எனவே நான் தான் உங்களுடையப் பெயரை உருவாக்கினேன் என்று எப்போதும் சச்சினிடம் சொல்வேன். அனைத்து ஷாட்டுகளையும் கொண்டுள்ள விராட் கோலி வேகமாக ரன்கள் குவிக்கக்கூடிய சிறந்த வீரர். ஆனால் எனக்கு எதிராக விளையாடிய சிறந்த இந்திய வீரர் எனக் கேட்டால் கவாஸ்கரை விட சச்சின் என்று சொல்வேன்”

இதையும் படிங்க: கடவுளிடம் வரம் வாங்கி வந்தவர் பும்ரா.. அதனால் தான் அவரால் இதை செய்யமுடியுது – ராபின் உத்தப்பா பாராட்டு

“வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு எதிராக கவாஸ்கரை போல சச்சின் ரன்கள் அடிப்பதை பார்க்க விரும்பினேன். ஏனெனில் கவாஸ்கர் மட்டுமே அந்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு எதிராக ரன்கள் அடித்த ஒரே இந்தியர். கபில் தேவ் விளையாடிய விதத்தை நான் விரும்பினேன். அவரும் நானும் சேர்ந்து நார்த்தம்டன் கிரிக்கெட் அணிக்காக விளையாடினோம்” என்று சொன்னார்.

Advertisement