ஐ.பி.எல் தொடரால் இந்த கிரிக்கெட் முற்றிலும் அழிஞ்சிடும். யாரும் ஐ.பி.எல் விளையாடாதீங்க – ஆலன் பார்டர் கோரிக்கை

Border

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய வீரர்கள் மட்டுமின்றி சர்வதேச வீரர்கள் அனைவரும் இத்தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வரும் இந்த தொடரானது தற்போது 13வது சீசனாக வெற்றிகரமாக சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.

ipl trophy

இத்தொடரின் மூலம் இந்திய அணிக்கும் சரி வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளுக்கும் சரி சிறப்பான வீரர்கள் கிடைத்து வருகிறார்கள். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தற்போது சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. இருந்தாலும் தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் என ஆலன் பார்டர் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் முழு ஈடுபாடு காட்டி விளையாடக்கூடாது என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : உள்ளூர் டி20 போட்டிகளுக்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை காட்டிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். பாக்கெட் முழுவதும் பணத்தை நிரப்பிக்கொள்ள உள்ளூர் போட்டிகள் நடத்தப் படுவதாக நான் கருதுகிறேன். மேலும் ஐபிஎல் தொடரில் விளையாட தங்கள் வீரர்களை கிரிக்கெட் வாரியங்கள் அனுப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் பிரான்சைஸி கிரிக்கெட் தொடர்கள் மூலம் டெஸ்ட் போட்டி முடிவுக்கு வரும். மேலும் டெஸ்ட் போட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதுபோன்ற தொடர்கள் நடத்தப்படுவதாக தெரிகிறது.

- Advertisement -

ipl-bowlers

அதனால் கோலி மாதிரியான வீரர்களும், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணி வீரர்களும் தான் டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்போடு வைத்துக் கொள்ள முன்வர வேண்டும். எனவே ஐபிஎல் தொடர்களில் வெளிநாட்டு வீரர்களும் சரி மற்ற வீரர்களும் சரி விளையாட கூடாது என்பதே எனது விருப்பம் என அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement